இந்தியா தங்களோட பேட்டிங்ல பெரிய தப்பு பண்ணிட்டாங்க.. பாகிஸ்தான் ஜெயிக்க வாய்ப்பிருக்கு.. கம்ரான் அக்மல்

Kamran Akmal 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எளிதாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் ஜூன் 9ஆம் தேதி நியூயார்க் நகரில் பாகிஸ்தானை சந்திக்கிறது. பொதுவாகவே உலகக் கோப்பைகளில் பாகிஸ்தானுக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா வெற்றிகரமான அணியாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக 2021 துபாய் தோல்வியை தவிர்த்து டி20 உலகக் கோப்பையில் சந்தித்த அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி கண்டுள்ளது. மறுபுறம் உலகக் கோப்பையில் எப்போதுமே இந்தியாவிடம் தடுமாறக்கூடிய பாகிஸ்தான் இம்முறை கத்துக்குட்டியான அமெரிக்காவிடம் தங்களுடைய முதல் போட்டியில் தோற்றது. அதனால் மிகப்பெரிய அவமானத்தை சந்தித்த பாகிஸ்தான் அணி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்தியாவின் தவறு:
எனவே இம்முறை எக்ஸ்ட்ரா அழுத்தத்தில் தடுமாறும் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இத்தொடரில் விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறக்கி இந்தியா பெரிய தவறை செய்துள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார். ஏனெனில் ரோஹித் – விராட் ஆகிய 2 வலது கை பேட்ஸ்மேன்களுக்கு முகமது – அமீர் சாகின் அப்ரிடி ஆகிய இடது கை பவுலர்கள் சவாலை கொடுக்கக் கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே இம்முறை இந்தியாவை வீழ்த்துவதற்கு பாகிஸ்தான் அணிக்கு கொஞ்சம் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “இந்தியாவின் பேட்டிங் வரிசை சரியாக இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விராட் கோலி 3வது இடத்தில் களமிறங்கினால் அழுத்தத்தை உள்வாங்கி வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்வார். அதுவே இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது”

- Advertisement -

“யசஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்கி விராட் கோலி 3வது இடத்தில் வரவேண்டும். ஆனால் விராட் கோலியை இந்தியா ஓப்பனிங்கில் களமிறக்கினால் அவர்கள் ஏதோ ஒரு இடத்தில் சிக்கக்கூடும். பொதுவாக விராட் கோலி ஒரு பக்கம் நங்கூரமாக நின்று போட்டியை வெற்றிகரமாக முடிக்கக் கூடியவர்”

இதையும் படிங்க: இதை செஞ்சுட்டா எங்கள யாராலும் வீழ்த்த முடியாது.. நியூஸிலாந்து வெற்றி பற்றி ரசித் கான் பேட்டி

“அந்த வகையில் விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறக்கி இந்தியா மிகப்பெரிய தவறு செய்துள்ளதாக நினைக்கிறேன். இருப்பினும் இந்தியா தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். பும்ரா, சிராஜ் ஆகியோர் நன்றாக பந்து வீசுகின்றனர். ஹர்திக் பாண்டியா விக்கெட்டுகளை எடுத்தார். ஒரே மைதானத்தில் அவர்களுக்கு 3 போட்டிகள் நடைபெறுவது கண்டிப்பாக சாதகமாக இருக்கும். இது போன்ற போட்டிகளுக்கு ஐசிசி தரமான பிட்ச்சை அமைக்க வேண்டும். இல்லையேல் ரசிகர்கள் சென்று விடுவார்கள்” என்று கூறினார்.

Advertisement