ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியில் ரோஹித் விலக வாய்ப்பு? காரணம் என்ன? வெளியான தகவல்

Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களிலும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்தியா தயாராகி வருகிறது.

மறுபுறம் கடந்த 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. சொல்லப்போனால் இம்முறை ரிஷப் பண்ட் போன்ற முக்கிய வீரர்களை அமைதியாக வைத்திருந்து இந்தியாவை வீழ்த்த தயாராகி வருவதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார். அதே போல நேதன் லயன் போன்ற ஆஸ்திரேலியா வீரர்களும் இந்தியாவை எதிர்கொள்ள தயாராகி வருவதாக தெரிவித்திருந்தனர்.

- Advertisement -

ஆஸ்திரேலிய தொடர்:

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கேப்டன் ரோஹித் சர்மா விலகுவதற்கு வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக தம்முடைய சொந்த காரணங்களுக்காக முதலிரண்டு போட்டிகளின் ஒன்றில் விடுப்பு கொடுக்குமாறு பிசிசிஐயிடம் ரோஹித் சர்மா இப்போதே அனுமதி கேட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியுள்ளது பின்வருமாறு. “அந்த சூழ்நிலை பற்றி முழுமையான தெளிவு தெரியவில்லை. தனிப்பட்ட விவகாரம் காரணமாக அந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஒன்றை தவிர்க்க வாய்ப்புள்ளதாக பிசிசிஐயிடம் ரோகித் சர்மா தெரிவித்ததாக தெரிகிறது”

- Advertisement -

ரோஹித் சந்தேகம்:

“ஒருவேளை தொடர் துவங்குவதற்கு முன்பாக அந்த சொந்த காரணம் தீர்க்கப்பட்டால் ரோஹித் சர்மா 5 போட்டிகளிலும் விளையாடுவார். அது அடுத்து வரும் நாட்களில் தெரிய வரும்” என்று கூறினார். முன்னதாக கடந்த ஆஸ்திரேலிய தொடரில் முதல் போட்டியில் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த சூழ்நிலையிலும் ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்த அப்போதைய கேப்டன் விராட் கோலி தனது குழந்தை பிறப்புக்காக நாடு திரும்பினார்.

இதையும் படிங்க: சேவாக், சச்சின் சாதனைகளை சமன் செய்த ஜோ ரூட்.. ஆசியாவின் கிங்’காக தனித்துவமான சாதனை

அதன் பின் ரஹானே தலைமையில் இந்தியா வென்றது வேறு கதை. அதே போல இம்முறை ரோகித் சர்மா தம்முடைய சொந்த காரணத்திற்காக ஒரு போட்டியில் விலகுவதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்கு இன்னும் முழுமையாக ஒரு மாதம் இருக்கிறது. எனவே நாட்டுப்பற்று கொண்ட ரோஹித் சர்மா முடிந்தளவுக்கு சொந்த பிரச்சினைகளை தீர்த்து விட்டு இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று நம்பலாம்.

Advertisement