வேண்டாம் என்று மறுத்த ரோஹித். வற்புறுத்தி ஓய்வளித்த பி.சி.சி.ஐ – காரணம் இதுதான்

Rohith
- Advertisement -

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் கலந்துகொண்டு விளையாட உள்ளது.

Net

- Advertisement -

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் தேர்வு 21ம் தேதி நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழு ஆலோசனைக்கு பிறகு அணிவீரர்களின் பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகும். இந்நிலையில் அந்த தொடரில் இந்திய அணியின் முன்னணி வீரரான ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனெனில் இந்த வருட ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வரும் ரோஹித் தற்போது டெஸ்ட் அணியிலும் தொடர்ந்துவிளையாடி வருவதால் அவரது பணிச் சுமையை குறைப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது ஆனால் இதனை ரோகித் சர்மா விரும்பவில்லை தான் தொடர்ந்து விளையாடுவதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தொடருக்கு அடுத்து நியூசிலாந்து சென்று 5 டி20 மற்றும் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் என பெரிய தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளதால் அதற்கு தயாராகும் விதமாக ரோகித் சர்மாவை சமாதானப்படுத்தி பி.சி.சி.ஐ ஓய்வு அளிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement