விராட் கோலி மட்டுமே பார்ம் அவுட், ரோஹித் சர்மா இல்ல – உருட்டும் முன்னாள் வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

Rcbvsmi
- Advertisement -

ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 தொடர் பல விறுவிறுப்பான தருணங்களுடன் மும்பை நகரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் சென்னையும் தொடர் தோல்விகளால் புள்ளி பட்டியலில் கடைசி இடங்களில் திண்டாடுவது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. அதேபோல் புதிய அணிகளான குஜராத், லக்னோ போன்றவை கூட அடுத்தடுத்த வெற்றிகள் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் ஜொலிக்கின்றன.

IPL 2022 (2)

- Advertisement -

கிட்டத்தட்ட அதே போலத்தான் இந்த தொடரில் விளையாடும் ஒருசில நட்சத்திர வீரர்கள் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மறுபுறம் ஆயுஷ் படோனி போன்ற நிறைய இளம் வீரர்கள் கூட தங்களது அபார திறமையால் சிறப்பாக செயல்பட்டு தங்களது அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்த வருகிறார்கள்.

என்னாச்சு விராட் – ரோஹித்:
அந்த வகையில் தற்போதைய தேதியில் இந்தியாவின் டாப் 2 நட்சத்திர பேட்ஸ்மேன்களாக கருதப்படும் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இந்த ஐபிஎல் தொடரில் ரன்களை எடுக்க முடியாமல் திண்டாடி வருவது பெரும்பாலான ரசிகர்களை ஏமாற்றமடைய வைக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிரடி சரவெடியாக அசால்ட்டாக ரன்களை குவித்து மிரட்டலாக செயல்பட்டு வந்த இவர்கள் சமீப காலங்களாக பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் பார்மின்றி திணறி வருகிறார்கள்.

mivsrcb

இதில் இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள விராட் கோலி ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் வெறும் 119 ரன்களை 19.83 என்ற சுமாரான சராசரியில் 124 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மட்டுமே எடுத்துள்ளார். மறுபுறம் தனது முதல் 6 போட்டிகளில் கிட்டத்தட்ட அதேபோலவே மோசமாக செயல்பட்டுள்ள ரோகித் சர்மாவும் வெறும் 114 ரன்களை 19 என்ற சுமாரான சராசரியில் 129.55 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். மொத்தத்தில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெறும் நிலையில் இந்தியாவின் தற்போதைய கேப்டனும் முன்னாள் கேப்டனும் இப்படி மோசமான பார்மில் திண்டாடுவது இந்திய ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது.

- Advertisement -

ரோஹித் பார்ம் அவுட் இல்லை:
இதில் விராட் கோலி விளையாடும் பெங்களூர் அணி கூட 7 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களில் வெற்றி நடைபோடுகிறது. ஆனால் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா மோசமாக செயல்படுவது அந்த அணியின் வெற்றியில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியதால் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாத மும்பை புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. இந்நிலையில் விராட் கோலியை போல ரோகித் சர்மா மோசமான பார்ம் அவுட் ஆகவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

Sanjay

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரோகித் எப்போதும் நல்ல 20+ ரன்களை எடுக்கும் போதெல்லாம் அவர் நல்ல டச்சில் உள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. அவர் விராட் கோலியை போல நல்ல பார்மில் இல்லாத நிலையில் இல்லை. ரோகித் சர்மாவின் பேட்டிங் அபாரமாக உள்ளது. ஆனால் திடீரென அவர் அவுட்டாகி விடுகிறார். மும்பை அணி எதிர்பார்க்கும் ஜோஸ் பட்லர் போன்ற பேட்ஸ்மேன் அடிக்கும் மிகப்பெரிய ஸ்கோர் மட்டுமே அவருக்கு கிடைக்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியாக பேட்டிங் செய்து சிறப்பான தொடக்கத்தை பெறும் ரோகித் சர்மா எதிர்பாராத வண்ணம் திடீரென அவுட்டாகி விடுகிறாரே தவிர விராட் கோலியை போல பார்மின்றி தவிக்கவில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். ஆனால் அவரைப்போலவே சிறப்பான தொடக்கத்தை பெறும் விராட் கோலியும் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் தவிக்கிறார் என்பதையும் இடையிடையில் 40+, 50+ போன்ற ரன்களை அடிக்கிறார் என்பதும் சஞ்சய் மஞ்ச்ரேக்கருக்கு தெரியவில்லையா என அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

RCB vs MI Rohit Sharma

இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளில் 2 முறை 41*, 48 ரன்களை விராட் கோலி தொட்ட நிலையில் ரோகித் சர்மா ஒருமுறை கூட 40 ரன்களை தொடவில்லை என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். அத்துடன் ரோஹித் சர்மா தனது ஊரான மும்பையை சேர்ந்தவர் என்ற காரணத்தால் இப்படி பேசுகிறாரா என்றும் சில ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

இத்துடன் மும்பையின் தோல்விக்கு காரணமாக இருக்கும் இஷன் கிஷன் மற்றும் கிரண் பொல்லார்ட் ஆகியோரை பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மேலும் பேசியது பின்வருமாறு. “இஷான் கிசான் கண்டிப்பாக மோசமான நிலையில் உள்ளார். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும் அவரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 80க்கும் கீழ் குறைந்து போயுள்ளது.

இதையும் படிங்க : ஒருவேளை சி.எஸ்.கே அணி மும்பை அணிக்கெதிரா தோத்தா அதுக்கு இதுமட்டும் தான் காரணம் – ரசிகர்கள் கொந்தளிப்பு

எனவே அவர் பார்முக்கு திரும்ப வேண்டும். அதேபோல் பேட்டில் பெரிய ரன்களை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்த முடியாத நிலையில் பந்துவீச்சின் வாயிலாக அணியின் வெற்றிக்கு கைரன் பொல்லார்ட் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக தற்போது மோசமாக காணப்படும் மும்பையின் பந்துவீச்சு துறையில் அவr மிகப்பெரிய பங்காற்ற வேண்டியுள்ளது” என தெரிவித்தார்.

Advertisement