ஒருவேளை சி.எஸ்.கே அணி மும்பை அணிக்கெதிரா தோத்தா அதுக்கு இதுமட்டும் தான் காரணம் – ரசிகர்கள் கொந்தளிப்பு

CSK-Fans
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் போட்டி டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 6 போட்டிகளில் விளையாடியுள்ள இரு அணிகளும் மோசமான நிலையிலேயே உள்ளது என்று கூறலாம். ஏனெனில் சென்னை அணி 6 போட்டியில் ஒரு வெற்றியுடன் 9-வது இடத்திலும், மும்பை அணி 6 போட்டிகள் 6 தோல்விகள் உடன் 10-வது இடத்திலும் பின்தங்கியுள்ளது.

cskvsmi

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி தற்போது சுவாரசியமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 155 ரன்கள் குவிக்க தற்போது 156 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வீரர்கள் செய்த சில தவறுகள் காரணமாக ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக சிஎஸ்கே அணியை சற்று விமர்சித்து வருகின்றனர் என்று கூறலாம்.

ஏனெனில் இந்த போட்டியின் முதலாவது ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணியானது ஆரம்பத்திலேயே மிகவும் தடுமாறியது. குறிப்பாக 2 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்ததால் மிகப்பெரிய தடுமாற்றத்தில் இருந்தனர். அதனைத்தொடர்ந்து தான் சிஎஸ்கே அணியின் சொதப்பல் நடைபெற்றது என்றே கூறலாம். ஏனெனில் சான்ட்னர் வீசிய பந்தில் சூரியகுமார் யாதவை ஸ்டம்பிங் செய்யும் எளிதான வாய்ப்பை முதல் முறையாக தோனி தவறவிட்டார். அதனைத் தொடர்ந்து சான்ட்னர் வீசிய பந்தில் ப்ரேவிஸ் கொடுத்த கேட்சை ஜடேஜா தவறவிட்டார்.

jadeja

அதோடு நிற்காமல் மேலும் ஒரு கேட்சை பிராவோ தனது பங்கிற்கு தவறவிட என்ன ஆச்சி சிஎஸ்கே அணிக்கு? இது நம்ம சிஎஸ்கே தானா? என்பது போல ட்விட்டரில் ரசிகர்கள் குமுற தொடங்கினர். இப்படி தொடர்ச்சியாக கேட்ச்கள் தவறவிடப்பட்டாலும் பெரிய ரன் குவிப்புக்கு மும்பை அணி செல்லவில்லை. ஆனாலும் மீண்டும் ஒருமுறை சூரியகுமார் கொடுத்த எளிதான கேட்டை ஜடேஜா தவறவிட்டார். அதோடு 19வது ஓவரில் கூட ஷிவம் துபே ஒரு கேட்டை தவறவிட்டார்.

- Advertisement -

இப்படி ஒரே போட்டியில் ஏகப்பட்ட கேட்ச்களை தவறவிட்டனர். இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் பீல்டிங் செயல்பாடு முற்றிலும் மோசம் என்றே கூறலாம். ஒருவேளை இந்த கேட்ச்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு இருந்தால் நிச்சயம் மும்பை அணி 100 ரன்களைக் கூட தொட்டு இருக்காது. தற்போது இந்த சொதப்பலான பீல்டிங் காரணமாக 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.

இதையும் படிங்க : காரணமே இல்லாம அவரை ட்ராப் பண்ணிங்கள்ல, அனுபவிங்க ! பஞ்சாப்பை அணியை விளாசிய ஹர்பஜன் சிங்

இதன் காரணமாக ஒருவேளை இந்த போட்டியில் சென்னை அணி இந்த இலக்கை துரத்த முடியாமல் தோல்வி அடைந்தால் நிச்சயம் சிஎஸ்கே அணி வீரர்கள் தவறவிட்ட இந்தக் கேட்ச்கள் தான் தோல்விக்கு காரணமாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக தங்களது கருத்துக்களை தற்போதே பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement