இதற்கு மேல என்னால பாராட்ட முடியாது.. அவர் மாதிரியே ரோஹித்தும் மகத்தான கேப்டன்.. ரவி சாஸ்திரி

Ravi Shastri 3.jpeg
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. முன்னதாக ஐபிஎல் தொடரில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்தார். அதனாலயே விராட் கோலி விடைபெற்றதும் இந்திய அணியின் முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆனால் அவருடைய தலைமையில் இருதரப்பு தொடர்களில் மிரட்டிய இந்தியா 2023 ஆசியக் கோப்பையில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றபடி 2022 ஆசியக் கோப்பை, 2022 உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் வழக்கம் போல ரோஹித் சர்மா கேப்டன்ஷிப் மீது விமர்சனங்களை எழுந்தன.

- Advertisement -

மகத்தான கேப்டன்:
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத அவர் ஐசிசி தொடர்களில் வெல்ல வேண்டுமெனில் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை கையில் எடுத்தார். அதைப் பின்பற்றி 2024 டி20 உலகக் கோப்பையில் அசத்திய ரோகித் சர்மா 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

அதனால் கபில் தேவ், எம்எஸ் தோனிக்கு பின் இந்தியாவுக்காக உலகக் கோப்பையை வென்ற 3வது கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்தார். இந்நிலையில் தோனியை போலவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மிகச்சிறந்த இந்திய கேப்டன் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒரு தந்திரவாதியாக ரோஹித் சர்மா சிறந்தவர் என்பதை மறந்து விடக்கூடாது. அவர் தோனியுடன் சிறந்த கேப்டன்களில் ஒருவராக இருப்பார். அவர்களில் யார் சிறந்தவர் என்று நீங்கள் என்னிடம் கேட்டால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தந்திரோபாயங்களை பொறுத்த வரை ரோஹித் சர்மா – தோனி ஆகிய இருவருமே சமமானவர்கள் என்று சொல்வேன். ரோஹித்துக்கு இதை விட பெரிய பாராட்டை என்னால் கொடுக்க முடியாது”

இதையும் படிங்க: என்னோட இதயம் உடைஞ்ச தருணம்.. ஆனா ஒத்துக்குவதை தவிர வழியில்லை.. 2019 உ.கோ தோல்வி பற்றி தோனி உருக்கம்

“ஏனெனில் எம்எஸ் தோனி என்ன செய்தார் அவர் எத்தனை கோப்பைகளை வென்றுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். தந்திரமான வியூகங்களை வகுப்பதில் ரோஹித் சர்மா கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்பதை இந்த டி20 உலகக் கோப்பையில் பார்த்தோம். குறிப்பாக ஹர்திக் பாண்டியா அல்லது ஜஸ்ப்ரித் பும்ரா அல்லது அக்சர் பட்டேல் போன்றவர்களை அவர் சரியான நேரத்தில் பயன்படுத்தியதை பார்த்தது சிறப்பாக இருந்தது” என்று கூறினார்.

Advertisement