IND vs NZ : அப்ரிடி, கெயிலுக்கு அடுத்து மாஸ் சாதனையில் 3 ஆம் இடம்பிடித்த ரோஹித் சர்மா – ஹிட்மேன்னா சும்மாவா

Sixes
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது இந்தூரில் நடைபெற்ற கடைசி போட்டியுடன் முடிவுக்கு வந்தது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணியானது இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்கிற கணக்கில் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது.

- Advertisement -

அதன்படி இந்தூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ரோகித் சர்மா(101) மற்றும் சுப்மன் கில்(112) ஆகியோரது சிறப்பான ஆட்டம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழந்து 385 ரன்கள் குவித்தது.

பின்னர் 386 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியால் 295 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததன் காரணமாக 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இந்த தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சதமடித்து அசத்தினார்.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா 85 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் என 101 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடிக்காமல் தவித்து வந்த ரோகித் மீது விமர்சனம் எழுந்த வேளையில் இந்த சதத்தின் மூலம் விமர்சகர்களுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்தவர்களின் பட்டியலில் தற்போது ரோகித் சர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான சாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிரிஸ் கெயில் 331 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இதையும் படிங்க : IND vs NZ : நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரிலிருந்து விலகிய இந்திய வீரர் – அடபவாமே இதுதான் காரணமா?

இவ்வேளையில் இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தை தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 273 சிக்ஸர்களோடு பதிவு செய்துள்ளார். அதோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்களில் அதிக சிக்சர்களை அடித்த வீரராகவும் ரோகித் சர்மா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement