மாபெரும் சாதனையுடன்.. குறைத்து எடை போட்ட ஜெஃப்ரி பாய்காட் முகத்தில் கரியை பூசிய ரோஹித் சர்மா

Geoferry Boycott 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன. அந்த நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி பிப்ரவரி 15ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் நாள் முடிவில் 326/5 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 10, கில் 0, ரஜத் படிதார் 5 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 33/3 என்ற மோசமான துவக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவை மறுபுறம் சிறப்பாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து 131, அறிமுகப் போட்டியில் அபாரமாக விளையாடிய சர்பராஸ் கான் 62 ரன்கள் குவித்து மீட்டெடுத்தார்கள்.

- Advertisement -

ஹிட்மேனின் பதிலடி:
அவர்களுடன் இணைந்து விளையாடி ரவீந்திர ஜடேஜா சொந்த ஊரில் சதமடித்து 110* ரன்கள் குவித்து களத்தில் இருக்கிறார். முன்னதாக இத்தொடரில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா முதலிரண்டு போட்டிகளில் அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டார்.

அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜெஃப்ரி பாய்காட் 36 வயதாகும் ரோகித் சர்மா சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தும் காலங்களை கடந்து விட்டதாக விமர்சித்தார். மேலும் கடந்த 4 வருடங்களில் சொந்த மண்ணில் வெறும் 2 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்துள்ள ரோஹித் சர்மா இந்தத் தொடரில் கணிசமான ரன்கள் அடிப்பாரே தவிர சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைக்கும் அளவுக்கு அசத்த மாட்டார் என்று பாய்காட் கூறியிருந்தார்.

- Advertisement -

அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் 36 வருடம் 291 நாட்களில் சதமடித்த ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் அதிக வயதில் சதத்தை அடித்த இந்திய கேப்டன் என்ற விஜய் ஹசாரேவின் 73 வருட சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1951இல் இங்கிலாந்துக்கு எதிராக விஜய் ஹசாரே 36 வருடம் 278 நாட்களில் சதம்டித்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: தப்பு என் மேல தான்.. 3வது போட்டியில் சதமடித்தும் வருத்தம் தெரிவித்த ஜடேஜா.. சோகமான பதிவு

அந்த வகையில் 36 வயதில் சாதிக்க முடியாது என்று தன்னை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட் முகத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து கரியை பூசியுள்ளார் என்று உறுதியாக சொல்லலாம். மேலும் இப்போட்டியில் 3 சிக்சர்களையும் அடித்த ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் (212*) அடித்த இந்திய கேப்டன் என்ற தோனியின் (211) சாதனையையும் உடைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement