கிரிஸ் கெயிலுக்கு அடுத்து 2 ஆவது வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

Gayle and Rohit
- Advertisement -

சண்டிகர் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எலுமினேட்டர் போட்டியில் விளையாடிய ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 81 ரன்கள் குவித்து அந்த அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

கிரிஸ் கெயிலுக்கு அடுத்து மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரோஹித் சர்மா :

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது போட்டியின் துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதிலும் குறிப்பாக அந்த அணியின் துவக்க வீரரான ரோஹித் சர்மா 50 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 162 ஸ்ட்ரைக்ரேட்டுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

- Advertisement -

அதோடு இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து சற்று சுமாரான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வந்த அவர் மீது விமர்சனங்கள் இருந்த வேளையில் மீண்டும் தனது பேட்டின் மூலம் விமர்சகர்களுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ரோஹித் சர்மா அடித்த 81 ரன்கள் மூலம் சில முக்கிய சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் :

நேற்றைய போட்டியில் 81 ரன்கள் அடித்ததன் மூலம் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 7000 ரன்களை பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஏற்கனவே இவருக்கு முன்னதாக விராட் கோலி ஐபிஎல் போட்டிகளில் 7000 ரன்களை அடித்துள்ள வேளையில் தற்போது இரண்டாவது வீரராக ரோஹித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று விராட் கோலி 7000 ரன்களை அடிக்க 5403 பந்துகளை எடுத்துக்கொண்ட வேளையில் ரோகித் சர்மா 5303 பந்துகளிலேயே 7000 ரன்களை எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் விராட் கோலியை விட 100 பந்துகள் குறைவாகவே அவர் 7000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார். அதுமட்டும் இன்றி நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா அடித்த 4 சிக்ஸர்களின் மூலம் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிரிஸ் கெயிலுக்கு அடுத்து இரண்டாவது வீரராக மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவர் வந்தா வெற்றி தான்.. ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு புகழாரம் சூட்டிய – ஹார்டிக் பாண்டியா

அதாவது ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் கெயில் மட்டும் தான் 300 சிக்ஸர்களுக்கு மேல் அடித்துள்ளார். அவருக்கு அடுத்த தற்போது ரோகித் சர்மாவும் நேற்று அடித்த 4 சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்ஸர்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் கிரிஸ் கெயிலுக்கு அடுத்து ஐபிஎல் போட்டிகளில் 300 சிக்ஸர்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement