வீடியோ : ட்ரேட் மார்க் ஃபுல் ஷாட் சிக்ஸர்களை விளாசிய ஹிட்மேன் – ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை உடைத்து புதிய சாதனை

- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 12ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 57வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 218/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த கேப்டன் ரோகித் சர்மா 29 (18) ரன்களும் இஷான் கிசான் 31 (20) ரன்களும் எடுத்து அவுட்டானர்கள்.

அதை தொடர்ந்து மிடில் ஆர்டரில் நேஹல் வதேரா 15 (17) விஸ்ணு வினோத் 30 (20) என இளம் வீரர்கள் அதிரடியான ரன்களை எடுத்து ஆட்டமிழந்த போதிலும் மறுபுறம் களமிறங்கி முதல் பந்திலிருந்தே தனது சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் குஜராத் பவுலர்களை மைதானத்தில் நாலாபுறங்களிலும் சுழன்றடித்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 6 சிக்ஸருடன் சதமடித்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக 20வது ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த அவர் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்து அசத்திய நிலையில் குஜராத் சார்பில் அதிகபட்சமாக ரசித் கான் 4 விக்கெட்களை எடுத்தார்.

- Advertisement -

ஹிட்மேன் சாதனை:
அதை தொடர்ந்து 219 ரன்களை துரத்திய குஜராத்துக்கு ரித்திமான் சகா 2, சுப்மன் கில் 6, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 4, அபினவ் மனோகர் 2 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் காப்பாற்றுவார்கள் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 41 (26) ரன்களும் ராகுல் திவாடியா 14 (13) ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். அதனால் கடைசி நேரத்தில் போராடிய ரசித் கான் வெறித்தனமாக 3 பவுண்டரி 10 சிக்சர்களை பறக்க விட்டு 79* (32) ரன்கள் குவித்து போராடியும் இதர வீரர்கள் கை கொடுத்த தவறியதால் 20 ஓவர்களில் குஜராத்தை 191/8 ரன்களுக்கு கட்டுப்படுத்திய மும்பை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதனால் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறிய மும்பை பிளே ஆப் சுற்று வாய்ப்பை 80% உறுதி செய்துள்ளது. அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பைக்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 2 சிக்சருடன் 29 (18) ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை பெற்றார். குறிப்பாக மோகித் சர்மா வீசிய 2வது ஓவரில் 6, 0, 4, 0, 6 என ட்ரேட் மார்க் ஃபுல் ஷாட் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்த அவர் அரை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

அதிலும் கடந்த 3 போட்டிகளில் 2 டக் அவுட்டாகி மோசமான சாதனை படைத்து கிண்டல்களுக்கு உள்ளான அவர் இந்த போட்டியில் பழைய ஃபார்முக்கு திரும்புவதற்கான அறிகுறிகளை காட்டி ஆட்டமிழந்தார். அந்த வகையில் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் பிளே ஆப் சுற்றி மும்பை நெருங்கும் இந்த வேளையில் ஹிட்மேன் என்றழைக்கப்படும் அவர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது மும்பைக்கு பலமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:MI vs GT : தனி ஒருவனாக ரன்ரேட்டை நிறுத்தி மாஸ் காட்டிய ரசித் கான் – போராடி வென்ற மும்பை, பிளே ஆஃப் சான்ஸ் உறுதியானதா?

அதை விட இந்த போட்டியில் 2 சிக்சர்களை அடித்து அசத்திய ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் 250 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்று அதிக சிக்ஸர்கள் அடித்த 2வது வீரர் என்ற ஏபி டீ வில்லியர்ஸ் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. கிறிஸ் கெயில் : 357 (141 இன்னிங்ஸ்)
2. ரோகித் சர்மா : 252* (234 இன்னிங்ஸ்)
3. ஏபி டீ வில்லியர்ஸ் : 251 (170 இன்னிங்ஸ்)
4. எம்எஸ் தோனி : 239 (246 இன்னிங்ஸ்)
5. விராட் கோலி : 229 (234 இன்னிங்ஸ்)

Advertisement