பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்னர் ரோஹித் சர்மா செய்த செயல்.. நியாபக மறதியால் ஏற்பட்ட கலகலப்பு – விவரம் இதோ

Rohit
- Advertisement -

நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பை பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.

பத்திரிகையாளர் சந்திப்பில் மறந்து சென்ற ரோஹித் சர்மா :

அதனை தொடர்ந்து 12 ஆண்டுகள் கழித்து தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த கோப்பையை கைப்பற்றியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காமல் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதால் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி அடுத்த சில மாதங்களிலேயே இந்த கோப்பையையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ராகித் சர்மா கோப்பையுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

அப்போது இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த ரோகித் சர்மா அதன் பின்னர் செய்த சம்பவம் ஒன்று தான் தற்போது அவரது மறதி விஷயத்தை மீண்டும் ஞாபகப்படுத்தி கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா கோப்பையை தனது அருகில் வைத்து அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்திருந்தார்.

- Advertisement -

இந்த பேட்டி முடிந்ததும் உடனடியாக அவர் கோப்பையை மேஜை மீது வைத்ததையே மறந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார். அதன் பின்னர் அதனை கவனித்த ஒரு பத்திரிகையாளர் கோப்பையை கொண்டு சென்று அவரது கைகளில் கொடுத்தார். இது தொடர்பான விடியோவும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஐ.சி.சி தேர்வுசெய்த 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஏற்கனவே ரோகித் சர்மாவிற்கு ஞாபக மறதி இருப்பது குறித்து விராட் கோலி பல்வேறு கருத்துக்களை கலகலப்பாக பகிர்ந்திருந்த வேளையில் அதனை மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக ரோகித் சர்மா கோப்பையை மறந்து எழுந்து சென்ற விவகாரம் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement