காலங்களை கடந்து நிற்கும் தல தல தான்.. கடைசி வரை தோனியை மிஞ்ச முடியாத ரோஹித் சர்மா

MS Dhoni Virat and Rohit
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படுவார் என்று மும்பை நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2013இல் பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே கோப்பை வென்று கொடுத்த ரோஹித் சர்மா 2020க்குள் மொத்தம் 5 கோப்பைகளை வென்று மும்பையை வெற்றிகரமான அணியாக மாற்றி இன்று இந்தியாவின் கேப்டனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

முன்னதாக சென்னை அணிக்காக தோனி 4 கோப்பையை வெல்வதற்குள் ரோஹித் சர்மா 2020 முடிவில் 5 கோப்பைகளை வென்று யாராலும் தொட முடியாத கேப்டனாக சாதனை படைத்தார். அப்போது தோனியை விட ரோகித் சர்மா தான் மகத்தான கேப்டன் என்று மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடினார்கள். இருப்பினும் உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சர்வதேச அரங்கில் தோனி சாதனை படைத்தது வேறு கதை.

- Advertisement -

தல தல தான்:
ஆனால் அதன் பின் டாடி ஆர்மி என்று கிண்டலடிக்கப்பட்ட வயதான வீரர்களை வைத்தே 2021, 2023இல் சென்னைக்காக கோப்பையை வென்ற தோனியும் தற்போது ஐபிஎல் வரலாற்றில் ரோகித் சர்மாவுக்கு நிகராக 5 கோப்பைகளுடன் வெற்றிகரமான கேப்டனாக நிற்கிறார். அதை விட 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மா 2013 சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்று மும்பை அணிக்காக கேப்டனாக மொத்தம் 6 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார்.

ஆனால் 2010, 2014 ஆண்டுகளில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற தோனி 5 ஐபிஎல் கோப்பைகளையும் சேர்த்து மொத்தம் சென்னை அணிக்காக 7 சாம்பியன் பட்டங்களை கேப்டனாக வென்றுள்ளார். இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் அணிக்காக அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் என்ற தோனியின் (7 கோப்பை) மகத்தான சாதனையை உடைக்க முடியாமலேயே ரோஹித் (6 கோப்பை) விடை பெற்றுள்ளார்.

- Advertisement -

அது போக ஐபிஎல் தொடரில் கேப்டனாக தோனி 226 ஐபிஎல் போட்டிகளில் 133 வெற்றிகளை 59.37% என்ற வெற்றி சராசரியில் குவித்துள்ளார். மறுபுறம் கேப்டனாக ரோஹித் சர்மா 158 போட்டிகளில் 87 வெற்றிகளை 56.32% என்ற சராசரியில் மட்டுமே குவித்துள்ளார். அந்த வகையில் வெற்றி சராசரி அடிப்படையிலும் தோனியை கடைசி வரை ரோகித் சர்மாவால் மிஞ்ச முடியவில்லை. இது போக 2008இல் மும்பைக்கு சச்சின் கொல்கத்தாவுக்கு கங்குலியை போல சென்னைக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்றினார்.

இதையும் படிங்க: கம்பேரிஷனே கிடையாது.. என்னைக்கும் அவர் தான் எங்களோட கேப்டன்.. கேஎல் ராகுல் நெகிழ்ச்சி பேட்டி

இருப்பினும் அந்த ஜாம்பவான்கள் குறுகிய காலத்திலேயே விடை பெற்ற நிலையில் 2013இல் தோனியின் மாணவர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மும்பை மற்றும் பெங்களூரு அணியின் கேப்டனாக பொறுப்பேற்று எதிராக விளையாடினர். ஆனால் தற்போது ரோஹித், விராட் ஆகிய இருவருமே கேப்டன்ஷிப் பதவிகளிலிருந்து பல்வேறு காரணங்களால் விலகியுள்ள நிலையில் தோனி மட்டும் 2024 சீசனிலும் கேப்டனாக செயல்பட உள்ளார். அந்த வகையில் காலங்கள் மாறினாலும் எதிரணிகளில் கேப்டன்கள் மாறினாலும் தோனி மட்டும் ஐபிஎல் வரலாற்றின் மகத்தான கேப்டனாக 2024 சீசனிலும் களமிறங்க உள்ளதால் தல தல தான் என்று ரசிகர்கள் சென்னை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement