- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முழுசா சொல்லமுடியாது 10 மணியை பாருங்க.. 4 ஸ்பின்னர்கள் எதற்கு? ஸ்ரீகாந்த் கேள்விக்கு ரோஹித் பதில்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியிடப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, பும்ரா போன்ற நட்சத்திர வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதே போல சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.

ஆனால் இந்த அணியில் நல்ல ஃபார்மல் இருக்கும் நடராஜன் போன்ற தமிழக வீரர் தேர்வு செய்யப்படாதது தமிழ்நாடு ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல இந்தியாவுக்காக கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டும் எடுக்கப்பட்டது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

- Advertisement -

ரோஹித் பதில்:
குறிப்பாக பிடித்த வீரர்களை தேர்வு செய்வதற்காக ரிங்கு சிங் பலி கிடாவாக மாற்றப்பட்டதாக முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தார். மேலும் ஒரேடியாக அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப், சஹால் ஆகிய 4 ஸ்பின்னர்கள் எதற்காக தேர்வு செய்யப்பட்டார்கள் என்றும் ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் 4 ஸ்பின்னர்களை தேர்ந்தெடுத்தது தம்முடைய முடிவு என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதற்கான பதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் அணியின் ஆட்டத்திலிருந்து கிடைக்கும் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதைப் பற்றி நான் விரிவாக பேச விரும்பவில்லை. ஆனால் கண்டிப்பாக நான் 4 ஸ்பின்னர்களை விரும்புகிறேன். வெஸ்ட் இண்டீஸில் நாங்கள் நிறைய கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம்”

- Advertisement -

“பொதுவாக அங்கே போட்டிகள் காலை 10 மணிக்கு துவங்கும். எனவே இந்த தேர்வில் டெக்னிக்கல் சம்பந்தமான விஷயம் இருக்கிறது. அதனால் 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது வெளியிட மாட்டேன். அந்த 4 பேரில் இருவர் அட்டாக் செய்யக்கூடிய ஆல் ரவுண்டர்கள். அது உங்களுக்கு சமநிலையை கொடுக்கிறது. அதனால் எதிரணியை வைத்து அந்த நால்வரில் யார் விளையாடுவார்கள் என்பதை முடிவெடுப்போம்”

இதையும் படிங்க: விராட் கோலியை பற்றிய கேள்விக்கு.. கையை உயர்த்தி செய்தியாளரை கலாய்த்த ரோஹித்.. 2 ஸ்வாரஸ்யமான பதில்

“நாங்கள் பிட்ச் மற்றும் எதிரணிகளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். மிடில் ஓவர்களில் எங்களுடைய ஆட்டத்தைப் பற்றி நாங்கள் அக்கறையுடன் பார்க்கிறோம். ஏனெனில் எங்களுடைய டாப் ஆர்டர் பேட்டிங் மோசமாக இல்லை. ஐபிஎல் மற்றும் இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் சில போட்டிகளில் அசத்தலாக விளையாடிய வீரரை (துபே) தேர்வு செய்துள்ளோம். ஆனால் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கேரண்டியாக சொல்ல முடியாது” என்று கூறினார்.

- Advertisement -