ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மார்ச் 9ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துபாயில் துவங்கியது. அந்தப் போட்டியில் லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் கோப்பையை வெல்வதற்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 15 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 15 முறை டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக முறை தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான உலக சாதனையை ஏற்கனவே இங்கே படைத்துள்ளது. இதையும் சேர்த்து ரோஹித் சர்மா தனது கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் ஒரு முறை கூட டாஸ் வெற்றி பெறவில்லை.
மோசமான உலக சாதனை:
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். இதற்கு முன் 1998 – 1999 காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் லாரா 12 போட்டிகளில் ஒரு முறை கூட டாஸ் வெல்லவில்லை. தற்போது அந்த 26 வருட மோசமான உலக சாதனையை ரோகித் சர்மாவும் சமன் செய்துள்ளார்.
அந்த வகையில் லீக் மற்றும் செமி ஃபைனல் போட்டிகளைப் போலவே இறுதிப் போட்டியிலும் டாஸ் அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் வராதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆனால் அதைப்பற்றி தாங்கள் கவலைப்படவில்லை என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ஏனெனில் ஏற்கனவே டாஸ் அதிர்ஷ்டம் இல்லாமலேயே தொடர்ந்து வெற்றி பெற்றதைப் போலவே இப்போட்டியிலும் வெல்ல முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா வெல்லுமா:
மேலும் இந்திய 11 பேர் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை என்று தெரிவித்த அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “துபாயில் போதுமான அளவுக்கு இருந்த நாங்கள் முதலில் பேட்டிங், பவுலிங் செய்துள்ளோம். எனவே சேசிங் செய்வதைப் பற்றி கவலைப்படவில்லை. இதற்கு முன் அதைச் செய்து நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அது உங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்து டாஸ் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளியில் எடுக்கிறது”
இதையும் படிங்க: இதுல இருந்தே உங்களுக்கு புரியலையா.. ரோஹித் ஓய்வை அறிவிக்கபோறார்னு – சுட்டிக்காட்டிய கங்குலி
“நாளின் இறுதியில் நீங்கள் எப்படி விளையாட விரும்புகிறீர்கள் என்பது முக்கியம். டாஸ் பற்றி கவலைப்படாமல் இதற்கு முன் விளையாடியது போல் இன்றும் விளையாட வேண்டும் என்பதையே நாங்களும் அணியில் பேசினோம். ஐசிசி தொடர்களில் நீண்ட வருடங்களாக சிறந்த கிரிக்கெட்டை விளையாடும் நியூசிலாந்து நல்ல அணி. அவர்களுக்கு எதிராக இன்று நன்றாக விளையாடுவது எங்களுக்கு சவால். நாங்கள் அதே அணியுடன் களமிறங்குகிறோம்” என்று கூறினார்.



