இதுல இருந்தே உங்களுக்கு புரியலையா.. ரோஹித் ஓய்வை அறிவிக்கபோறார்னு – சுட்டிக்காட்டிய கங்குலி

Ganguly and Rohit
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார் என்பது குறித்த செய்திகளே கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து வருகின்றன. ஏனெனில் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றியவுடன் உடனடியாக டி20 வடிவ போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு அறிவித்திருந்தார்.

ரோஹித் சர்மா கண்டிப்பா ஓய்வை அறிவிப்பார் : சவுரவ் கங்குலி

அதனை தொடர்ந்து தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தலைமை தாங்கி வழி நடத்தி வரும் அவர் இறுதிப்போட்டி வரை இந்திய அணியை அழைத்து வந்துளளார். நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றவுடன் அவர் ஓய்வை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை அவர் ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும் அவர் கேப்டன் பதிவிலிருந்து நீக்கப்படுவார் என்று செய்தியும் வெளியானது. இந்நிலையில் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்காகத்தான் இந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோஹித் சர்மாவின் ஓய்வு எப்போது என்பதுதான் தற்போது பலரது கேள்வியாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டி20 உலக கோப்பை வென்ற கையோடு அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் வேளையில் அவருடைய எதிர்காலம் குறித்து தேர்வாளர்கள் என நினைக்கிறார்கள்? என்பது எனக்கு தெரியவில்லை.

- Advertisement -

ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணி இறுதிப் போட்டியை வென்றால் ரோகித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவிக்க அது சரியான தருணமாக இருக்கும் என நினைக்கிறன். அதன் காரணமாகவே அவர் இந்த இறுதிப் போட்டிக்கு முன்பான பத்திரிக்கையாளர் சந்திப்பை தவிர்த்துள்ளார் என்று சவுரவ் கங்குலி சுட்டிக்காட்டி உள்ளார்.

இதையும் படிங்க : விராட் கோலி, ரோஹித் சர்மா மட்டும் பத்தி பேசாம அவரையும் பாருங்க.. பெரிய ஆளா வருவாரு – பாராட்டிய ஸ்டீவ் ஸ்மித்

ஏனெனில் பத்திரிக்கை சந்திப்பில் கலந்து கொண்டால் அவர் முன்கூட்டியே ஓய்வு முடிவு குறித்து பேச வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதனால் போட்டி முடிந்த பின்னர் தனது முடிவை அவர் அறிவிக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் நிச்சயம் ரோகித் சர்மா ஏதாவது ஒரு முடிவை அறிவிப்பார் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement