இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக 3வது போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கையை தோற்கடித்து இந்தியா அட்டகாசமான வெற்றி பெற்றது. அதனால் இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த இந்தியா புதிய கேப்டன் சூரியகுமார் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதில் டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்தியாவுக்காக விளையாட உள்ளனர். ஆரம்பத்தில் ஓய்வெடுக்க முடிவு எடுத்திருந்த அவர்களை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கட்டாயமாக வரவழைத்து விளையாட வைத்துள்ளார்.
சிக்கிய ரோஹித்:
குறிப்பாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தேவையான அணியை இப்போதே ரோஹித் சர்மா தலைமையில் கௌதம் கம்பீர் கட்டமைக்க விரும்புகிறார். அதன் காரணமாக இத்தொடரில் விளையாட வந்துள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கொழும்பு நகரில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபடும் 3 புகைப்படங்களை கேப்டன் ரோஹித் சர்மா தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.
இந்திய அணிக்காக மீண்டும் விளையாடத் தயாராகி வருகிறேன் என்பதை குறிக்கும் வகையில் அவர் பதிவிட்டது வைரலானது. ஆனால் அந்த 3 படங்களில் முதல் புகைப்படம் மட்டும் எடிட்டிங் செய்யப்பட்டிருந்ததை ரசிகர்கள் உடனடியாக கண்டறிந்தனர். ஆம் அந்த படத்தில் ரோஹித் சர்மா தம்முடைய வயிற்றை குறைத்து எடிட்டிங் செய்து பதிவிட்டார்.
இருப்பினும் எடிட்டிங்கில் வயிற்றை குறைத்த அவர் கை பகுதியை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டார். ஏனெனில் வயிற்றை குறைத்து எடிட்டிங் செய்த காரணத்தால் ரோஹித் சர்மாவின் மணிக்கட்டு வளைந்திருந்தது அப்பட்டமாக தெரிந்தது. அத்துடன் பிசிசிஐ இணையத்தில் வெளியிடப்பட்ட அதே உண்மையான எடிட்டிங் செய்யப்படாத புகைப்படத்தில் ரோஹித் சர்மாவின் கை வளையாமலும் வயிறு கொஞ்சம் பெரியதாகவும் உள்ளது.
இதையும் படிங்க: இந்த 2 பசங்க சச்சின் – கங்குலியை நியாகப்படுத்துறாங்க.. அவர் ஒன்டேவிலும் அசத்தப் போறாரு.. உத்தப்பா பாராட்டு
எனவே அந்த ஒரிஜினல் புகைப்படத்தை எடுத்து ரோஹித் சர்மாவுக்கு பதிலளித்து ரசிகர்கள் கலாய்த்தனர். குறிப்பாக எடிட்டிங் செய்வதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக விராட் கோலி போல உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினால் வயிற்றை குறைத்து விடலாம் என்று ரோஹித் சர்மாவை ரசிகர்கள் கிண்டலடித்தனர். அதனால் தற்போது அந்த புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா டெலிட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



