இந்த 2 பசங்க சச்சின் – கங்குலியை நியாகப்படுத்துறாங்க.. அவர் ஒன்டேவிலும் அசத்தப் போறாரு.. உத்தப்பா பாராட்டு

Robin Uthappa 2
- Advertisement -

இலங்கைக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 கிரிக்கெட் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக 3வது போட்டியில் இலங்கையை சூப்பர் ஓவரில் இந்தியா தோற்கடித்தது. அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது.

முன்னதாக அந்தத் தொடரில் ஜெய்ஸ்வால் 40 (21), 30 (15), 10 (9) ரன்களை அதிரடியாக எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். அதே போல அவருடன் துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 34 (16), 39 (38) ரன்கள் அடித்து வெற்றியில் தம்முடைய பங்காற்றினார். அந்த இருவருமே ஜோடியாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை இந்தியாவுக்காக ஓப்பனிங்கில் 516 ரன்களை 64.50 என்ற சராசரியில் எடுத்துள்ளனர்.

- Advertisement -

சச்சின் – கங்குலி போல:
அதனால் ஓய்வு பெற்ற ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது இடத்தை இந்திய டி20 அணியில் அவர்கள் நிரப்புவார்கள் என்று சமீப காலங்களில் சில முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் ஜெய்ஸ்வால் – கில் இடது – வலது கை ஓப்பனிங் ஜோடியை பார்க்கும் போது தமக்கு சச்சின் – கங்குலி நினைவுக்கு வருவதாக முன்னாள் ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார்.

இது பற்றி சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் விளையாடுவதை பார்க்கும் போது எனக்கு சௌரவ் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கரை நினைவுப் படுத்துகிறார்கள். அதாவது அவர்கள் இருவரின் ஆட்டமும் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறது. அவர்களுடைய திட்டங்களும் ஒருவரை ஒருவர் சார்ந்துள்ளது”

- Advertisement -

“அது தான் அவர்கள் பேட்டிங் செய்ய ஒன்றாக களமிறங்க செல்லும் போது எனக்குத் தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் வாய்ப்பு பெறும் போது அதை அவர் வேகமாக பிடித்துக் கொள்வார் என்று கருதுகிறேன். ஏனெனில் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் அவருக்கு ஒருநாள் போட்டிகள் மிகவும் எளிதாக இருக்கும். அந்தளவுக்கு அனைத்து நேரங்களிலும் உலகில் தம்மால் ரன்கள் அடிக்க முடியும் என்பதை ஜெய்ஸ்வால் காண்பித்து வருகிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 123 ரன்ஸ்.. முரளி விஜயை முந்திய சாய் சுதர்சன்.. டிஎன்பிஎல் வரலாற்றில் மாஸ் சாதனை.. கம்பீர் கவனிப்பாரா?

முன்னதாக சுப்மன் கில் 3 வகையான இந்திய அணியிலும் ஓரளவு நன்றாக விளையாடி நிலையான இடத்தைப் பிடித்து துணை கேப்டனாக முன்னேறியுள்ளார். அதே போல டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அடித்து நொறுக்கும் ஜெய்ஸ்வால் விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு பெற உள்ளார். அதனால் வருங்காலத்தில் அவர்கள் சச்சின் – கங்குலி போல் அசத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement