CWC 2023 : லெஜெண்ட்ஸ் சச்சின், பாண்டிங், சேவாக், பிளமிங்கை முந்திய ரோஹித் – 6 புதிய சாதனைகளின் லிஸ்ட் இதோ

Rohit Sharma 4
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 9வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. டெல்லியில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 131 (84) ரன்கள் குவித்தார்.

அவருடன் இஷான் கிசான் 47, விராட் கோலி 55*, ஸ்ரேயாஸ் ஐயர் 25* ரன்கள் எடுத்ததால் 35 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்தியா எளிதான வெற்றி பெற்றது. முன்னதாக இப்போட்டியில் அடுத்த 5 சிக்சர்கள் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற கிறிஸ் கெயில் (554 சிக்ஸர்கள்) சாதனையை உடைத்த ரோகித் சர்மா (555*) புதிய உலக சாதனை படைத்தார்.

- Advertisement -

சாதனை பட்டியல்:
மேலும் 7 சதங்களுடன் உலக கோப்பையில் அதிக சதங்கள் (6) என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை உடைத்த அவர் மாபெரும் உலக சாதனை படைத்தார். அத்துடன் உலகக்கோப்பையில் வேகமாக சதமடித்த இந்திய வீரர் என்ற கபில் தேவின் (72 பந்துகள்) சாதனையை 63 பந்துகளில் உடைத்த அவர் புதிய வரலாறு படைத்தார். இது போக அவர் மேலும் படைத்த சாதனைகளை பற்றி பார்ப்போம்:

1. இப்போட்டியில் அடித்த சதத்தின் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் அதிக வயதில் சதமடித்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை ரோகித் சர்மா உடைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 36 வருடம் 164 நாட்கள், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2023*
2. ரிக்கி பாண்டிங் : 36 வருடம் 95 நாட்கள், இந்தியாவுக்கு எதிராக, 2011

- Advertisement -

2. அத்துடன் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 28
2. சச்சின் டெண்டுல்கர் : 27
3. சௌரவ் கங்குலி : 25

3. மேலும் உலகக் கோப்பையில் வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட போட்டிகளில் 3 சதங்களுடன் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் நியூசிலாந்தின் ஸ்டீபன் பிளமிங், வெஸ்ட் இண்டீஸின் கோர்டன் கிரீனிட்ஜ், பாகிஸ்தானின் ரமேஷ் ராஜா ஆகியோர் தலா 2 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

4. அத்துடன் உலகக்கோப்பையில் சேசிங் செய்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (131) பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் ரோகித் படைத்துள்ளார். இதற்கு முன் 1996 உலக கோப்பையில் கென்யாவுக்கு எதிராக சச்சின் 127* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

5. அது போக ஒருநாள் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த ஓவரில் சதமடித்த இந்திய வீரர் என்ற சேவாக்கின் சாதனையும் அவர் தகர்த்துள்ளார். இப்போட்டியில் அவர் 17.2 ஓவரிலேயே 100 ரன்கள் தொட்ட நிலையில் இதற்கு முன் 2009இல் நியூசிலாந்துக்கு எதிராக வீரேந்திர சேவாக் 18.4 ஓவரில் சதமடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: CWC 2023 : விராட் கோலி நல்லவர்ங்க.. நீங்க தான் தப்பா புரிஞ்சுக்கிடீங்க.. நவீன் முதல் முறையாக பேட்டி

6. இது போக சாம்பியன்ஸ் ட்ராபி, உலகக் கோப்பை போன்ற வெள்ளைப்பந்து ஐசிசி தொடர்களில் அதிக சதங்கள் (8) அடித்த வீரர் என்ற உலக சாதனையும் ரோகித் படைத்துள்ளார். இதற்கு முன் சவுரவ கங்குலி, கிறிஸ் கெயில், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் தலா 7 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement