- Advertisement -
இந்திய கிரிக்கெட்

3 சாதனைகளை தென்னாப்பிரிக்க தொடரில் நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் சர்மா – விவரம் இதோ

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர துவக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி இருந்த அவர் ஒரு சதம், ஒரு அரைசதம் என மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியிருந்தார்.

3 சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் ரோஹித் சர்மா :

அதனை தொடர்ந்து தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாட இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ரோகித் சர்மா விளையாடி வருவதால் அவரது ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒவ்வொரு தொடரின் போதும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

அதேவேளையில் அவரது செயல்பாடை இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கெதிராக நடைபெற இருக்கும் இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று முக்கிய சாதனைகளை அவர் நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவலும் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

அந்த வகையில் எதிர்வரும் இந்த தென்னாப்பிரிக்க தொடரில் அவர் 98 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து வடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து 20,000 ரன்களை அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

ஏற்கனவே சச்சின், விராட் கோலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ள வேளையில் நான்காவது வீரராக ரோஹித் சர்மா இந்த பட்டியலில் இணைவார். அதேபோன்று மூன்று சிக்ஸர்களை அவர் விளாசும் பட்சத்தில் ஷாகித் அப்ரிடியை தாண்டி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையையும் நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : இதுல மட்டும் உங்க கவனத்தை செலுத்துங்க.. அடுத்த உ.கோ தொடரில் விளையாட ரோஹித் சர்மாவுக்கு – பி.சி.சி.ஐ அறிவுரை

இந்த தொடரில் அவர் 133 ரன்களை குவிக்கும் பட்சத்தில் சொந்த மண்ணில் 5000 ரன்களை ஒருநாள் போட்டியில் அடித்த வீரர் என்ற பட்டியலில் சச்சின், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இந்திய வீரராக அந்த சாதனை பட்டியலிலும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -