இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் மோசமான தடுமாற்றத்தை சந்தித்து வருவது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா இந்த இங்கிலாந்து தொடரிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவரது எதிர்காலம் எந்த பிரச்சனையும் இன்றி இருக்கும் என்று கூறப்படுகிறது.
மோசமான ஆட்டத்தை தொடரும் ரோஹித் சர்மா :
மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் கைப்பற்றவில்லை எனில் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக தற்போது இந்தியாவில் துவங்கியுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி வரும் இந்திய அணியானது வெற்றியை நோக்கி எளிதாக சென்று கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இந்த போட்டியில் ரோகித் சர்மாவின் தனிப்பட்ட ஆட்டம் மோசமாக அமைந்துள்ளது அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 91 ரன்கள் மட்டுமே அடித்த அவர் ஆஸ்திரேலிய தொடரின் போது ஒட்டுமொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதன் காரணமாக இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 249 ரன்கள் துரத்த துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா வெறும் 7 பந்துகளை மட்டுமே சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
இப்படி அவரது இந்த மோசமான ஆட்டம் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. கடைசியாக அவர் விளையாடிய பத்து இன்னிங்ஸ்களில் 0,8,18,1,3,6,10,3,9,2 என்று ஒருமுறை கூட 20 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டம் இழந்திருக்கிறார்.
இதையும் படிங்க : போன மாசம் கழுத்து வலி.. இந்த மாசம் கால் வலியா.. விராட் கோலியை சாடிய ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ
இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது இந்த மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்தால் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



