போன மாசம் கழுத்து வலி.. இந்த மாசம் கால் வலியா.. விராட் கோலியை சாடிய ஆகாஷ் சோப்ரா – விவரம் இதோ

Chopra
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலமாகவே பேட்டிங் ஃபார்மில் தடுமாற்றத்தை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கிய வீரராக பார்க்கப்படும் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் இழந்த தனது பார்மை மீட்டெடுத்து மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியை அவர் தற்போது தவற விட்டுள்ளார்.

விராட் கோலியை சாடிய ஆகாஷ் சோப்ரா :

இது குறித்து டாசின் போதே பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : விராட் கோலிக்கு முழங்காலில் சுலுக்கு ஏற்பட்டதன் காரணமாக இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் அறிமுகமாக இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தற்போது 36 வயதை எட்டியுள்ள விராட் கோலி தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் ஒவ்வொரு தொடரும் மிக முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியை அவர் காயத்தினால் தவறவிட்டது அனைவரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டதாவது : ஏற்கனவே பேட்டிங் பார்மின்றி தவிக்கும் விராட் கோலி ஜனவரி மாதம் டெல்லி அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாட இருந்த வேளையில் கழுத்து வலி காரணமாக அந்த போட்டியை தவறவிட்டார். அதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறி போட்டியை தவற விட்டுள்ளார்.

- Advertisement -

இப்படி விராட் கோலி காயத்தால் போட்டியை தவறவிட்டு பார்த்ததே கிடையாது. ஆனால் தற்போது அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர் காயத்தை காரணம் காட்டி அடிக்கடி விலகி வருகிறார் என ஆகாஷ் சோப்ரா சாடியுள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான பீட்டர்சன் கூறுகையில் :

இதையும் படிங்க : எந்தவொரு இந்திய வீரரும் செய்யாத வராலாற்று சாதனையை இன்று நிகழ்த்திய ஹர்ஷித் ராணா – விவரம் இதோ

ரோகித் சர்மாவும் விராட் கோலியும் மனிதர்கள் தான் அவர்கள் ரோபோ கிடையாது. எனவே அவர்களுக்கும் இது போன்ற சரிவு ஏற்படலாம். நவீன காலகட்டத்தில் கிரிக்கெட் முன்னேறி வரும் வேளையில் இவர்கள் இருவரும் இணைந்து விளையாடுவதை பார்க்க முடியாமல் கூட போகலாம். எனவே இவர்கள் இருவரும் இணைந்து விளையாடி வரும் ஒவ்வொரு போட்டியையும் ரசிகர்கள் ஆதரித்து பார்த்து மகிழ வேண்டும் என பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement