- Advertisement -
ஐ.பி.எல்

முதல் இந்திய வீரராகவும், 9 ஆவது சர்வதேச வீரராகவும் டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா

நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியானது நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பாக அதிகபட்சமாக கேப்டன் ரகானே 67 ரன்களையும், ரகுவன்ஷி 51 ரன்களையும் குவித்தனர்.

முதல் இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்திய சாதனை :

பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது கொல்கத்தா அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக அதிகபட்சமாக ரிக்கல்டன் 81 ரன்களையும், ரோகித் சர்மா 78 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் ஆட்டம் அதிரடியாக அமைந்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றியும் எளிதாக அவர்களது கைகளுக்கு சென்றது. ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா தற்போது ஐபிஎல் போட்டிகளில் எவ்வாறு விளையாடப்போகிறார்? என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் நேற்றைய போட்டியில் அவரது ஆட்டம் படு அமர்க்களமாக இருந்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக 38 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 205 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 78 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் அவர் இந்த போட்டியில் அடித்த 6 சிக்ஸர்களின் மூலம் ஒட்டுமொத்த டி20 போட்டியிலும் சேர்த்து ஒரு மாபெரும் சாதனை ஒன்றினை முதல் இந்திய வீரராக நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : நேற்றைய போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம் சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் என அனைத்தையும் சேர்த்து டி20 போட்டிகளில் மட்டும் 550 சிக்ஸர்களை பூர்த்தி செய்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : 5 பேர் போட்டிக்கு இருந்தும் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டது ஏன்? – கோச் விளக்கம்

அவருக்கு அடுத்து இந்த பட்டியலில் விராட் கோலி 440 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 110 சிக்ஸர்கள் இடைவெளி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த ஒன்பதாவது வீரர் என்ற இடத்தையும் ரோகித் சர்மா பிடித்துள்ளார்.

- Advertisement -