டி20 கிரிக்கெட்டில் கோலிக்கு அடுத்து 2 ஆவது இந்திய வீரராக ரோஹித் நிகழ்த்திய மாபெரும் சாதனை – விவரம் இதோ

Rohit and Kohli
- Advertisement -

ஹைதராபாத் நகரில் நேற்று நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணியும் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி அசத்தியது.

2 ஆவது இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் ரோஹித் நிகழ்த்திய சாதனை :

அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே குவித்தது. சன் ரைசர்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கிளாஸன் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

பின்னர் 144 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை அணி 15.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 46 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 70 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரது இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாவது இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினையும் ரோஹித் நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தில் ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் விராட் கோலி ஒட்டுமொத்தமாக 407 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி 13208 ரன்களை குவித்து இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த வீரராக இருக்கிறார். அவரை தொடர்ந்து தற்போது இரண்டாவது வீரராக ரோகித் சர்மா நேற்று அடித்த 70 ரன்கள் மூலம் டி20 கிரிக்கெட்டில் 12000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரராக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : இஷான் கிஷன் விக்கெட் விடயத்தில் நடந்தது என்ன? அம்பயர் அவுட் கொடுக்க என்ன காரணம்? – விவரம் இதோ

அதோடு டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் ரன்களை கடந்த எட்டாவது வீரராகவும் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயில் 463 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement