- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் இந்திய வீரராகவும், 5 ஆவது சர்வதேச வீரராகவும் ஆஸி மண்ணில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ஹிட் மேன்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா இரண்டாவது போட்டியில் தற்போது பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது இன்று அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது.

ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை நிகழ்த்திய ரோஹித் சர்மா :

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் விளையாடி வரும் வேளையில் இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்திருந்த வேளையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

- Advertisement -

பின்னர் அடுத்து வந்த விராட் கோலி 4 பந்துகளை மட்டுமே சந்தித்து மீண்டும் ஒருமுறை டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஆனால் அதேவேளையில் தற்போது ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரோகித் சர்மா 74 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 50 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் அவர் 2 ரன்கள் எடுத்ததன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் முதல் இந்திய வீரராகவும், ஐந்தாவது சர்வதேச வீரராகவும் வரலாற்று சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :

- Advertisement -

ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை அடித்த முதல் இந்திய வீரராக ரோஹித் சர்மா இன்று சாதனை நிகழ்த்தியுள்ளார். இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1000 ரன்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : கோட்டையில் காலியான கோலி.. 18 வருட கேரியர் காணாத மோசமான சாதனை.. இந்தியா தடுமாற்றம்

அவருக்கு அடுத்து விராட் கோலி 802 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 740 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், தோனி 684 ரன்களுடன் நான்காவது இடத்திலும் உள்ளனர். அதேபோன்று சர்வதேச அளவில் விவியன் ரிச்சர்ட்ஸ், டெஸ்ட்மென்ட் ஹெய்ன்ஸ், குமார் சங்ககாரா, மஹேலா ஜெயவர்த்தனே ஆகியோருக்கு அடுத்து ஐந்தாவது வீரராக ரோகித் சர்மா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -