மெல்போர்ன் டெஸ்ட்டில் சுப்மன் கில் நீக்கப்பட்டதுக்கு இதுதான் உண்மை காரணம் – ரோஹித் சர்மா பதில்

Rohit-and-Gill
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி டிசம்பர் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்ததோடு இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளனர்.

சுப்மன் கில் நீக்கப்படவில்லை.. அணிக்கு அவர் தேவை :

அதேவேளையில் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி இந்த தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது கடினமாகிவிட்டது. ஆனாலும் இந்த தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் அடுத்ததாக சிட்னி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நான்காவது போட்டியின் போது இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆட்டக்காரரான சுப்மன் கில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது பெருமளவில் விவாதங்களை எழுப்பியது. இது குறித்து தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் :

நான் நான்காவது போட்டிக்கு முன்னதாகவே சுப்மன் கில்லிடம் பேசி விட்டேன். மேலும் அவருக்கு காரணம் என்ன என்பது நன்றாக தெரியும். நான் ஒரு விடயத்தை அவரிடம் தெளிவாக கூறினேன். நான் அணியிலிருந்து அவரை நீக்கவில்லை. கூடுதலாக ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர் வேண்டும் என்பதினால் அணியின் பேலன்ஸிற்காக வாஷிங்டன் சுந்தர் பிளேயிங் லெவனிற்குள் வந்தார். மற்றபடி சுப்மன் கில்லை நீக்கவில்லை.

- Advertisement -

அவருடைய திறமை என்ன? அவருடைய பேட்டிங் ஃபார்ம் என்ன? என்பது எனக்கு தெரியும். அவர் ஒரு சிறப்பான வீரர். மெல்போர்ன் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை கூடுதலாக ஒரு பந்துவீச்சாளுடன் சென்றால் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்று நினைத்தோம். எனவே மைதானத்தின் தன்மையை கணக்கில் கொண்டு தான் கில் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடியிருந்தார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் அந்த விருப்பத்தால் தான் சுப்மன் கில் 4 ஆவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் – கவாஸ்கர் விளாசல்

அப்படி சுந்தர் அணியில் இணையும் பட்சத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் எங்களது அணிக்கு சாதகம் கிடைக்கும் என்பதனாலே சுப்மன் கில் நான்காவது போட்டியில் விளையாடவில்லை. அதேபோன்று அணியின் காம்பினேஷன் பொறுத்து எந்த ஒரு வீரரையும் நீக்கவும், சேர்க்கவும் முடிவு செய்வேன் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement