ரோஹித் சர்மாவின் அந்த விருப்பத்தால் தான் சுப்மன் கில் 4 ஆவது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் – கவாஸ்கர் விளாசல்

Gavaskar
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கி மெல்போர்ன் நகரில் “பாக்ஸிங் டே” போட்டியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 184 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தங்களது இரண்டாவது தோல்வியையும் பதிவு செய்தது.

ரோஹித் சர்மாவின் சுயநலமான முடிவு தான் இது : சுனில் காவஸ்கர்

இதன் மூலம் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையும் உண்டாகிவிட்டது. இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் ஏற்பட்ட சில மாறுதல்கள் அனைவரது மத்தியிலும் பெரிய விவாதத்தை எழுப்பி இருந்தன.

- Advertisement -

அதிலும் குறிப்பாக சுப்மன் கில் அந்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டது பெரிய அளவில் பேசப்பட்ட விடயமாக மாறியது. ஏனெனில் நான்காவது போட்டியின் போது டாசில் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த மெல்போர்ன் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதனால் கூடுதல் சுழற்பந்து வீச்சாளராக ஜடேஜாவுடன் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என்று அறிவித்தார்.

அதன் காரணமாக சுப்மன் கில் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது வாஷிங்டன் சுந்தரரை ரோகித் சர்மா பெரிய அளவில் பந்துவீச வைக்கவில்லை. இதுகுறித்து பேசியுள்ள சுனில் கவாஸ்கர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தருக்கு இந்த போட்டியில் பெரிய அளவில் நீங்கள் பந்துவீச வாய்ப்பை வழங்கவில்லை.

- Advertisement -

சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்று கூறிவிட்டு அவரை நீங்கள் பயன்படுத்தாதது ஏன்? சுப்மன் கில் வெளியேற்றப்பட்டதற்கு முழு முக்கிய காரணமே மீண்டும் ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்க விருப்பப்பட்டதுதான் என்று நினைக்கிறேன். அதன் காரணமாகவே சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ளார். ஒரு போட்டிக்கு ஏற்றவாறு கேப்டனாக உங்கள் முடிவை எடுக்க வேண்டியது சரியான ஒன்றுதான்.

இதையும் படிங்க : சுப்மன் கில்லுக்கு ஆப்பு வைத்த குஜராத் டைட்டன்ஸ்.. ரஷீத் கானுக்கு அடிச்ச ஜாக்பாட் – விவரம் இதோ

ஆனால் அணிக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்ய வேண்டும். ரோகித் சர்மா இந்த விடயத்தில் தான் துவக்க வீரராக மீண்டும் களமிறங்க வேண்டும் என்பதற்காகவே கில்லை நீக்கிவிட்டு மூன்றாவது இடத்தில் கே.எல் ராகுலை தள்ளி இருக்கிறார் என சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Advertisement