IND vs WI : டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக மாபெரும் சாதனையை படைக்கப்போகும் ரோஹித் சர்மா – என்னனு பாருங்க

rohith
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது முக்கியமான டி20 போட்டி இன்று அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடோ மாகானத்தில் நடைபெற உள்ளது.

IND vs WI Nicholas Pooran Rohit Sharma

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணியும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குவதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் இந்த நான்காவது போட்டியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த ரோகித் சர்மா காத்திருக்கிறார்.

அது குறித்த விவரத்தை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி விராட் கோலிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பினை ஏற்ற ரோஹித் சர்மா தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை ரோகித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி 7 டி20 தொடர்களை வரிசையாக வென்றிருக்கிறது.

Thomas

இந்நிலையில் இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்த வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரோடு சேர்த்து மொத்தம் 8 டி20 தொடரை தொடர்ச்சியாக வென்ற இந்திய கேப்டன் என்ற மாபெரும் சாதனையை ரோகித் சர்மா படைப்பார்.

- Advertisement -

அதோடு டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர்கள் பட்டியலில் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் ரோஹித் இன்னும் இரு வெற்றிகளை பெரும் பட்சத்தில் அதிக டி20 போட்டிகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறுவார்.

இதையும் படிங்க : காமன்வெல்த் 2023 : தங்கம் வென்ற பாகிஸ்தான் பளுதூக்கும் வீரருக்கு பாபர் அசாம் கொடுத்த பரிசு – மனதை வென்ற தருணம்

இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டனாக அதிகபட்சமாக தோனி 41 வெற்றிகளை பெற்று தந்து முதலிடத்திலும், விராட் கோலி 30 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அவர்களை தொடர்ந்து ரோகித் சர்மா தற்போது 29 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement