இதே வேலையா போச்சு, பேசாம ரோஹித் டி20 கேப்டன்ஷிப் பொறுப்பை விடலாம் – முன்னாள் ஜாம்பவான் ஆலோசனை

Rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு அந்த அணிக்கு எதிராக கடந்த வருடம் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் வரும் ஜூலை 1-ஆம் தேதியன்று களமிறங்குகிறது. கடந்த வருடம் விராட் கோலி தலைமையிலான இந்தியா ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றது. எனவே தற்போது நடைபெறப்போகும் அந்த தொடரின் கடைசி போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா வெற்றியை பதிவு செய்து 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

rohith 1

- Advertisement -

அதற்காக கடந்த வாரமே இங்கிலாந்துக்கு பறந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் அங்கு லீசெஸ்டர்ஷைர் கவுன்டி அணிக்கு எதிராக 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்றனர். அப்போட்டியில் கேப்டனாக களமிறங்கிய ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 25 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சில் களமிறங்கவில்லை. முதலில் காயம் காரணமாக களமிறங்கவில்லை என்று பேசப்பட்ட நிலையில் கரோனா ஏற்பட்டதால் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிட்னெட் – காயங்கள்:
இதனால் இந்த முக்கியமான போட்டியில் அவர் களமிறங்குவது சந்தேகமாகியுள்ளது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் வரை 3 வகையான இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலி ஒரு உலக கோப்பையை வாங்கி தரவில்லை என்பதுடன் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா டி20 கேப்டனாக வேண்டும் என்று நிறைய பேச்சுக்கள் இருந்தது.

rohith

அதன் காரணமாக அக்டோபர் மாதம் துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பையுடன் டி20 பதவியிலிருந்து விலகிய விராட் கோலியை வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்ற கோணத்தில் வலுக்கட்டாயமாக கடந்த டிசம்பரில் ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கிய பிசிசிஐ ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி 48 வெற்றிகளுடன் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்த போதிலும் திடீரென கடந்த ஜனவரியில் டெஸ்ட் கேப்டன் பதவியிலும் விலகினார்.

- Advertisement -

ஆனால் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதல் தொடரில் இந்தியாவை வழி நடத்துவதற்கு முன்பாகவ கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் காயத்தால் வெளியேறியதால் கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். அதிலிருந்து குணமடைந்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டுமே சொந்த மண்ணில் இதுவரை வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் தற்போது முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் களமிறங்க காத்திருந்த நிலையில் திடீரென்று மீண்டும் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

rohith 1

சமீப காலங்களாகவே விராட் கோலியை போல் ஃபிட்டாக அல்லாமல் முழு உடல் தகுதியுடன் இல்லாதது ரோகித் சர்மாவின் காயங்களுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அதனால் இப்போது கூட சமூக வலைதளங்களில் கேலி கிண்டல்களுக்கு உள்ளாகியுள்ள அவர் ஏற்கனவே 34 வயதை கடந்து விட்டதால் அடுத்த 1 – 2 வருடங்களுக்கு மேல் 3 வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்படுவது கடினம் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதனாலேயே கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் தற்போது ஹர்திக் பாண்டியா என அடுத்த தலைமுறை கேப்டன்களை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் காயங்கள், உடல்தகுதி, வயது மற்றும் பணிச்சுமை இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு டி20 கேப்டன் பதவியை ரோகித் சர்மா வகிக்காமல் இருப்பது நல்ல முடிவாக இருக்கும் என்று ஜாம்பவான் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டுக்கு வேறு யாரையாவது கேப்டனாக நியமிக்கலாம் என்று இந்திய அணி நிர்வாகம் நினைத்தால் ரோகித் சர்மாவை விடுவிக்கலாம் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க : TNPL தொடரின் அறிமுக போட்டியிலேயே அசத்திய டைரக்டர் கவுதம் மேனனின் மகன் – யார் அவர்? எந்த அணி?

“ஒன்று அது ரோகித் சர்மாவின் பணிச் சுமையை குறைத்து இந்த வயதில் புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். மற்றொன்று டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன் இருந்தால் ரோகித் சர்மாவால் அவ்வப்போது ஓய்வெடுத்துக் கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை சிறப்பாக வழிநடத்த முடியும். ஒருவேளை இந்திய நிர்வாகம் இன்னும் அனைத்து கிரிக்கெட்டுக்கும் ஒரே கேப்டன் தான் வேண்டும் என்ற பாலிசியை பின்பற்ற விரும்பினால் அதை செய்வதற்கு ரோகித் சர்மாவே சிறந்தவர் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement