38 வயதில் சச்சின் சாதனையை உடைத்த ரோஹித் உலகளவில் சாதனை.. கம்பீர், அகர்கருக்கு மாஸ் பதிலடி

Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் தொடர்ச்சியாக ஐசிசி தொடர்களில் தோல்வியை சந்தித்து வந்தது. அந்த நிலையில் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 2022 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனல் வரை சென்று தோற்றது. அப்போது தம்முடைய சொந்த சாதனையைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற புதிய அணுகுமுறையை ரோஹித் கையிலெடுத்தார்.

அந்த அணுகுமுறையில் 2023 உலகக் கோப்பையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா 11 தொடர் வெற்றிக்களுடன் ஃபைனல் வரை சென்று தோற்றுது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்தது. அதே வேகத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியையும் இந்தியா 12 வருடங்கள் கழித்து வென்று வரலாறு படைத்தது.

- Advertisement -

துடிக்கும் கம்பீர், அகர்கர்:

அப்போது விராட் கோலி, ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாட விரும்புவதாக தெரிவித்தனர். ஆனால் 2027இல் 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியாது என்று கருதும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட முயற்சிக்கிறது. அதனாலேயே ரோஹித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து தூக்கிய தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவக்கியுள்ளது.

அதற்காக மனம் தளராத ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் 202 ரன்கள் அடித்து அசத்தார். குறிப்பாக கடைசி போட்டியில் 121* ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 38 வயதில் இந்தியாவுக்காக சதமடித்த வீரராக சாதனை படைத்தார். அதே போல விராட் கோலியும் 74* ரன்கள் விளாசி தம்முடைய தரத்தை நிரூபித்தார்.

- Advertisement -

ஹிட்மேன் மாஸ் பதிலடி:

இந்நிலையில் ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆஸ்திரேலியா தொடரில் தடுமாறிய புதிய கேப்டன் சுப்மன் கில் முதலிடத்தில் இருந்து 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். மறுபுறம் தொடர்நாயகன் விருது வென்ற ரோஹித் சர்மா 781 புள்ளிகளுடன் நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் வாயிலாக உலகளவில் ஒருநாள் போட்டிகளில் 38 வயதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து ரோஹித் சர்மா சாதனைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் டி20யில் விரும்பியதை ஆஸி கொடுத்துட்டாங்க.. சுமாரான முடிவுடன் இந்திய அணியை அறிவித்த சூரியகுமார்

அத்துடன் அதிக (38 வருடம் 182 நாட்கள்) வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த இந்திய வீரராகவும் ரோஹித் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 2011இல் சச்சின் டெண்டுல்கர் 38 வருடம் 73 நாட்களில் முதலிடத்தில் இருந்ததே முந்தைய சாதனை. அதனால் தம்மை கழற்றி விட துடிக்கும் அஜித் அகர்கர் மற்றும் கௌதம் கம்பீருக்கு அவர் மாஸ் பதிலடி கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். விராட் கோலி 6, ஸ்ரேயாஸ் ஐயர் 9வது இடங்களில் உள்ளார்கள். டாப் 10 பவுலர்கள் தரவரிசையில் குல்தீப் யாதவ் 7வது இடத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். டாப் 10 அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற போதிலும் 122 புள்ளிகளுடன் இந்தியா தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக சொல்கிறது.

Advertisement