ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் இந்தியா தோற்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் மோதும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர் 29ஆம் தேதி துவங்கியது. அத்தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் கான்பெரா நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்குத் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. கடைசியாக 2025 ஆசியக் கோப்பையில் விளையாடி வென்ற இந்திய அணியிலிருந்து ரிங்கு சிங், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விளையாடவில்லை என்று கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். குறிப்பாக அர்ஷ்தீப் சிங் இந்தியாவுக்காக 100+ டி20 விக்கெட்டுகளை எடுத்த வீரராக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணி:
2024 டி20 உலகக் கோப்பை போன்ற நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ள அவரை கழற்றி விட்டுள்ள கௌதம் கம்பீர் மீண்டும் ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பை வாரி வழங்கியுள்ளார். அதனால் வழக்கம் போல ரசிகர்கள் அந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் ஜித்தேஷ் சர்மா பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
குல்தீப் யாதவ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பை இழந்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசினாலும் இந்தியா பேட்டிங் செய்யவே விரும்பியதாக கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பிட்ச் நன்றாக தெரிவதால் நாங்கள் முதலில் பேட்டிங் செய்யவே பார்க்கிறோம்”
இந்தியா பேட்டிங்:
“இங்கே நிறைய போட்டிகள் நடைபெறாததால் பிட்ச் 2வது இன்னிங்ஸில் ஸ்லோவாக மாறலாம் என்று எங்களுடைய அனலைஸ்ட் தெரிவித்துள்ளனர். அதனால் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். இங்கே நேற்று அதிகப்படியான குளிர் நிலவியது. இன்று நன்றாக இருக்கிறது. எங்களுடைய வீரர்கள் தங்களுடைய வேலையை அறிந்து நன்றாக செயல்படுவதால் இந்தியா டி20 கிரிக்கெட்டில் அசத்தி வருகிறது”
இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் நமக்கெல்லாம் சர்ப்ரைஸ் தரப் போறாரு.. மகிழ்ச்சியான அப்டேட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்
“நாங்கள் பொறுப்பை தோளில் வைத்து மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும். எங்கள் அணியில் நிறைய போட்டி இருப்பது நல்ல தலைவலி. நிறைய ஆப்ஷன்கள் இருப்பது நல்லது” என்று கூறினார். இந்திய அணி: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (கீப்பர்), சிவம் துபே, அக்சர் பட்டேல், ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்ப்ரித் பும்ரா



