ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. தௌஹீத் ஹ்ரிடாய் அதிகபட்சமாக 100 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101*, ராகுல் 41* ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தனர். அதனால் இத்தொடரை இந்தியா வெற்றிகரமாக துவங்கிய நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வதற்கு பிட்ச் சவாலாக இருந்தது.
அசத்திய ஹிட்மேன்:
இருப்பினும் அதில் தம்முடைய ஸ்டைலில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா 7 பவுண்டரியுடன் 41 (36) ரன்களை 113.88 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அந்த வகையில் ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடிய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு நல்ல அடித்தள துவக்கத்தைக் கொடுத்தார். இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 11000 ரன்கள் கடந்துள்ளார்.
அதை 261 இன்னிங்ஸில் எடுத்துள்ள ரோகித் ஒருநாள் கிரிக்கெட்டில் 2வது வேகமாக 11000 ரன்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்து புதிய சாதனைப் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி: 222
2. ரோஹித் சர்மா: 261*
3. சச்சின் டெண்டுல்கர்: 276
4. ரிக்கி பாண்டிங்: 286
5. சௌரவ் கங்குலி 293
அதிக ஐசிசி தொடர்கள்:
இது போக 2007 டி20 உலகக் கோப்பையில் முதல் முறையாக விளையாடிய ரோஹித் சர்மா இதையும் சேர்த்து தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 15 ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடியுள்ளார். இதன் வாயிலாக அதிக ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடிய இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க:இந்த 2 விஷயத்தை சரியா செஞ்ருந்தா கதையே வேற.. இந்தியாவை வீழ்த்திருப்போம்.. சாண்டோ பேட்டி
இதற்கு முன் விராட் கோலி, எம்எஸ் தோனி, யுவ்ராஜ் சிங் ஆகியோர் தலா 14 ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடியதே முந்தைய சாதனை. அதே பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 12 தொடர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதே சாதனையில் உலக அளவில் கிறிஸ் கெயில், மகிளா ஜெயவர்த்தனே, ஷாஹித் அப்ரிடி, ஷாகிப் அல் ஹசன் (தலா 16) முதலிடத்தில் உள்ளார்கள்.



