இந்த 2 விஷயத்தை சரியா செஞ்ருந்தா கதையே வேற.. இந்தியாவை வீழ்த்திருப்போம்.. சாண்டோ பேட்டி

Najmul shanto
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய கிரிக்கெட் அணி தங்களின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேசம் 229 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக தௌஹீத் ஹ்ரிடாய் 100 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அடுத்ததாக விளையாடிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 41, சுப்மன் கில் 101*, ராகுல் 41* ரன்கள் எடுத்து 46.3 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதனால் சாம்பியன்ஸ் டிராபி இந்தியா வெற்றிகரமாக துவங்கிய நிலையில் வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -

தோல்விக்கான காரணம்:

இந்நிலையில் 35-5 என பவர்பிளே முடிவதற்குள்ளேயே நிறைய விக்கெட்டுகள் இழந்ததே இப்போட்டியில் தோல்வியை சந்திக்கக் காரணம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ தெரிவித்துள்ளார். மேலும் 9 ரன்னில் ராகுல் கொடுத்த கேட்ச்சை தவற விட்டது போன்ற சுமாரான ஃபீல்டிங்கும் தோல்வியை சந்திக்க காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். இல்லையேல் இந்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடித்திருப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி சாண்டோ பேசியது பின்வருமாறு. “பவர்பிளே ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்கு இப்போட்டியில் தோல்வியை கொடுத்தது. தௌஹீத் – ஜாகிர் அலி அபாரமாக பேட்டிங் செய்தனர். ஆனாலும் நாங்கள் களத்தில் தவறுகள் செய்தோம். கேட்ச்கள் தவற விட்டு ரன் அவுட் வாய்ப்புகளை தவற விட்டோம். அதை செய்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்”

- Advertisement -

இந்தியாவை வீழ்த்திருப்போம்:

“தௌஹீத் – ஜாகிர் இந்திய ஸ்பின்னர்களுக்கு எதிராக கவரும் வகையிலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். அவர்கள் அதைத் தொடர்வார்கள் என்று நினைக்கிறேன். எங்கள் அணியில் எக்ஸ்ட்ரா ஸ்பின்னர் தேவை என்று நான் நினைக்கவில்லை. புதிய பந்தில் நாங்கள் விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்”

இதையும் படிங்க: அவருக்காக காத்திருந்தோம்.. அக்சர் படேலுக்கு மன்னிப்பு டின்னர் கொடுக்கனும்.. வங்கதேசத்தை வீழ்த்தியது பற்றி ரோஹித் பேட்டி

“பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நாங்கள் சமீபத்தில் விளையாடினோம். எனவே அங்குள்ள சூழ்நிலைகளுக்கு எங்கள் வீரர்கள் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று உறுதியாக சொல்வேன்” எனக் கூறினார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்த போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை பிப்ரவரி 23ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement