IND vs ENG : சிக்ஸர்கள் பறக்கவிடுவதால் புதிய உலகசாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ

Rohit Sharma Six
Advertisement

லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 12-ஆம் தேதியன்று இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கியது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் விராட் கோலி காயத்தால் விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இந்தியாவின் எரிமலையான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அந்த அணியின் ஜேசன் ராய் 0 (5) ஜோ ரூட் 0 (2) என 2 முக்கிய பேட்ஸ்மேன்களை இந்தியாவின் நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா தனது அனலான பந்துவீச்சில் டக் அவுட் செய்து மிரட்டினார்.

IND vs ENG Jasprit Bumrah

அதை பார்த்த முகமது சமி தனது பங்கிற்கு அடுத்ததாக களமிறங்கிய பென் ஸ்டோக்சை கோல்டன் டக் அவுட் செய்து அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 7/3 என்ன மோசமான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு ஜானி பேர்ஸ்டோ 7 (20) லியாம் லிவிங்ஸ்டன் 0 (8) என மேலும் 2 முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்த ஜஸ்பிரித் பும்ரா தெறிக்கவிடும் வகையில் பந்து வீசினார். அதனால் 26/5 என்ற படுமோசமான தொடக்கத்தைப் பெற்ற இங்கிலாந்தை மீட்க போராடிய மொய்ன் அலி 14 (18) கேப்டன் ஜோஸ் பட்லர் 30 (32) ஆகியோரையும் சொற்ப ரன்களில் அவுட் செய்து நங்கூரத்தை போடவிடாமல் இந்தியா பெவிலியன் அனுப்பி வைத்தது.

- Advertisement -

அற்புதமான வெற்றி:
அதனால் 53/6 என மொத்தமாக சாய்ந்த இங்கிலாந்து 100 ரன்களை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது கடைசியில் டேவிட் வில்லி 21 (26) கார்ஸ் 15 (26) ஓவெர்ட்டன் 8 (7) என பவுலர்கள் கணிசமான ரன்கள் எடுத்தனர். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது குறைந்தபட்ச ஸ்கோரான 86 ரன்கள் கண்டத்தை தப்பிய அந்த அணி 110 ரன்களுக்கு சுருண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அவமானத்தைச் சந்தித்தது. அந்த அளவுக்கு முக்கிய பேட்ஸ்மேன்களை அற்புதமாக பந்துவீசி காலி செய்த இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகமது சமி 3 விக்கெட்டுகள் அமைத்தனர்.

IND vs ENG Rohit Sharma

அதை தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்களுக்குப்பின் ஜோடி சேர்ந்த ஷிகர் தவானுடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த கேப்டன் ரோகித் சர்மா அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டார். ஏற்கனவே பேட்டிங்கில் நொறுங்கிப்போன இங்கிலாந்தை பந்து வீச்சிலும் அடித்து நொறுக்கிய ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் கடந்து 76* (58) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுத்தார். அவருடன் கம்பெனி கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ஷிகர் தவான் 4 பவுண்டரியுடன் 31* (54) ரன்கள் விளாசினார்.

- Advertisement -

ஹிட்மேன் ரோஹித்:
அதனால் 18.4 ஓவரிலேயே 114 ரன்கள் எடுத்த இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று மிரட்டியுள்ளது. இந்த வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் எடுத்து கருப்பு குதிரை செயல்பட்ட ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை அசால்ட்டாக சேசிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதுமே பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பட்டாசாக செயல்பட்ட இந்தியா அடுத்ததாக நடந்த டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று பழி தீர்த்தது.

Rohit and Dhawan

தற்போது ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மாவின் அற்புதமான கேப்டன்ஷிப் வாயிலாக வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள இந்தியா வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து தன்னை உலகத்தரம் வாய்ந்த அணி என்று நிரூபித்துள்ளது. அதைவிட இப்போட்டியில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு பேட்டிங்கில் இந்தியாவின் வெற்றியை எளிதாக்கிய ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்சர்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாறு படைத்தார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 250*
2. எம்எஸ் தோனி : 229
3. சச்சின் டெண்டுல்கர் : 195

- Advertisement -

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் 250 சிக்சர்களை அதிவேகமாக அடித்த பேட்ஸ்மேன் என்ற புதிய உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 224* இன்னிங்ஸ்
2. ஷாஹித் அப்ரிடி : 259 இன்னிங்ஸ்
3. கிறிஸ் கெயில் : 268 இன்னிங்ஸ்

மேலும் ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் 4-வது இடத்தில் ஜொலிக்கும் ரோஹித் சர்மா இந்தியாவின் பெருமையாக திகழ்கிறார். அந்த பட்டியல்:
1. ஷாஹித் அப்ரிடி : 351
2. கிறிஸ் கெயில் : 331
3. சனாத் ஜெயசூரியா : 270
4. ரோஹித் சர்மா : 250*
5. எம்எஸ் தோனி : 229

இதையும் படிங்க : IND vs ENG : ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் இந்தியா நிகழ்த்திய 2 – அரிதான வரலாற்று சாதனைகள்

அத்துடன் கடந்த 5 வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரசிகர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் யாருமே தொடாத முதல் இடத்திலும் ரோகித் மின்னுகிறார். அந்தப் பட்டியல்:
1. ரோஹித் சர்மா : 126* (72 போட்டிகள்)
2. கிறிஸ் கெயில் : 93 (30 போட்டிகள்)
3. ஜானி பேர்ஸ்டோ : 79 (59 போட்டிகள்)

Advertisement