IND vs ENG : ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றில் இந்தியா நிகழ்த்திய 2 – அரிதான வரலாற்று சாதனைகள்

Team India Jasprit Bumrah
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 12-ஆம் தேதி துவங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் நட்சத்திரம் விராட் கோலி காயத்தால் விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து இந்தியாவின் துல்லியமான நெருப்பான பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து 25.2 ஓவரில் வெறும் 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

போட்டி துவங்கிய போது நிலவிய ஈரப்பதமான கால சூழ்நிலையை பயன்படுத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா தனது முதல் ஓவரிலேயே ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து டக் அவுட் செய்து மிரட்டினார். அப்போது வந்த பென் ஸ்டோக்ஸ் முகமது ஷமியின் அனலான பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதனால் 7/3 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு ஜானி பேர்ஸ்டோ 7 (20) லியம் லிவிங்ஸ்டன் 0 (8) என முக்கிய பேட்ஸ்மேன்களை மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அபார வெற்றி:
அதனால் 26/5 என ஆரம்பத்திலேயே மொத்தமாக சரிந்த இங்கிலாந்தை காப்பாற்ற முயன்ற மொயின் அலி 14 (18) கேப்டன் ஜோஸ் பட்லர் 30 (32) என அந்த அணியின் முக்கிய வீரர்களை மீண்டும் சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா நங்கூரத்தை போட விடாமல் பெவிலியன் திருப்பி அனுப்பியது. அதனால் 59/7 என மொத்தமாக சரிந்த அந்த அணி டேவிட் வில்லி 21, ஓவெர்ட்டன் 8, கார்ஸ் 15 என பவுலர்களின் உதவியுடன் 100 ரன்களை தாண்டினாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாபத்திற்கு உள்ளானது.

Rohit and Dhawan

அப்படி பந்து வீச்சிலேயே இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ வைத்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும் முகமது சமி 3 விக்கெட்டுகளையும் எடுத்தார். அதைத்தொடர்ந்து 111 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நீண்ட நாட்கள் கழித்து ஒன்றாக களமிறங்கிய ஷிகர் தவான் – ரோஹித் சர்மா தொடக்க ஜோடி நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 18.4 ஓவரில் 114/0 ரன்களை எட்ட வைத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

- Advertisement -

அரிதான சாதனைகள்:
அதில் ஒருபுறம் நிதானமாக 4 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 31* (54) ரன்கள் எடுக்க மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 7 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் கடந்து 76* (58) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார். இந்த வெற்றியால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று இந்தியா அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் எடுத்த முக்கிய பங்காற்றிய பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவுக்கு ஜஸ்பிரித் பும்ரா 6, ஷமி 3, பிரசித் கிருஷ்ணா 1 என 3 இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே ஒன்று சேர்ந்து இங்கிலாந்தின் 10 விக்கெட்களையும் எடுத்து கதையை முடித்தனர்.

Shami-1

இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சில் எதிரணியின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் எடுப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இதற்குமுன் 5 முறை எதிரணியின் 10 விக்கெட்டுகளை இந்திய பாஸ்ட் பவுலர்கள் எடுத்துள்ளனர். ஆனால் அந்த 5 போட்டிகளிலும் எதிரணி சேசிங் செய்யும்போது எடுக்கப்பட்டதாகும். அந்த பட்டியல்:

- Advertisement -

1. சந்து 2, மதன் லால் 4, ரோஜார் பின்னி 4 – ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1983
2. சந்து 2, கபில் தேவ் 1, மதன் லால் 3, ரோஜார் பின்னி 1, மொஹிந்தர் அமர்நாத் 3 – வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 1983 உலகக் கோப்பை பைனல்
3. கங்குலி 5, குருவில்லா 2, மோகன்ட்டி 2, ஹர்விந்தர் 1 – பாகிஸ்தானுக்கு எதிராக, 1997
4. ஜாஹீர் கான் 2, ஸ்ரீநாத் 4, நெக்ரா 2 – இலங்கைக்கு எதிராக, 2003
5. மோகித் சர்மா 4, ஸ்டூவர்ட் பின்னி 6 – வங்கதேசத்துக்கு எதிராக, 2014

Rohit Sharma Six

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாற்றிலேயே முதல் முறையாக இங்கிலாந்துக்கு எதிராகவும் அதன் சொந்த மண்ணிலும் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்வதும் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

இதையும் படிங்க : பர்ஸ்ட் பாலை போடும்போதே எனக்கு தெரிஞ்சி போச்சி. அதுவே நான் 6 விக்கெட் எடுக்க காரணம் – ஆட்டநாயகன் பும்ரா

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அதிவேகமாக சேசிங் செய்து இந்தியா தனது 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. அந்த பட்டியல்:
1. 11.3 ஓவர்கள், கென்யாவுக்கு எதிராக, 2001
2. 14.5 ஓவர்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2018
3. 18.4 ஓவர்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022*

Advertisement