கங்குலி மாதிரி ரோஹித் அந்த 3 பிளேயர்ஸ்க்கு சப்போர்ட் பண்ணாரு.. அதான் வெற்றிகளுக்கு காரணம்.. சஞ்சய் பங்கார்

Sanjay Bangar
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் 8 போட்டிகளிலும் 8 வெற்றிகளை பெற்று வெற்றி நடை போட்டு வருகிறது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள இந்தியா செமி ஃபைனல் சுற்றுக்கும் தகுதி பெற்றுள்ளதால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது.

இந்த வெற்றிகளுக்கு அனைத்து வீரர்களுமே மிகச்சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துவதே முக்கிய காரணமாக இருந்து வருகிறது. குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து வந்த ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய 3 முக்கியமான வீரர்கள் தங்களுடைய தரத்தை காண்பிக்கும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

கங்குலி மாதிரி:
சொல்லப்போனால் காயத்தால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்து வந்த இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் உலகக்கோப்பையில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் காணப்பட்டது. அத்துடன் கடைசி நேரத்தில் குணமடைந்து வந்தாலும் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்ததால் எந்த ஃபார்மில் இருக்கிறார்கள் என்பது தெரியாததால் நேரடியாக உலக கோப்பையில் களமிறங்கி இந்த 3 பேரால் சாதிக்க முடியுமா என்ற கேள்வியும் காணப்பட்டது.

ஆனால் சரியான நேரத்தில் காயத்திலிருந்து குணமடைந்து வந்த இந்த 3 பேரும் தங்களை சாம்பியன் வீரர் என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி நடைக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் ஹர்பஜன் சிங், சேவாக், ஜஹீர் கான் போன்றவர்களை முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கண்டறிந்து வாய்ப்பு கொடுத்தது போல் ரோகித் சர்மா இந்த 3 வீரர்களுக்கு மோசமான காலங்களில் ஆதரவு கொடுத்ததாக சஞ்சய் பங்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

அதனாலேயே அந்த 3 வீரர்களால் சிறப்பாக செயல்பட முடிவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “காயமடைந்து குறைந்த தன்னம்பிக்கையுடன் இருந்த வீரர்களுக்கும் ஆதரவு கொடுத்த ரோகித் சர்மாவின் முடிவுகளை நான் நம்பினேன். ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா, கேஎல் ராகுல் ஆகிய 3 வீரர்கள் காயத்திலிருந்து கம்பேக் கொடுத்தனர். குறிப்பாக அவர்களுடைய திறமைகளை நம்பி உங்களுக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையை இந்த அணி நிர்வாகம் கொடுத்தது”

இதையும் படிங்க: ஆரம்பத்துலேயே விட்டுட்டோம்.. நீங்க சொன்னதை அதிகமா செய்யனும்.. நெதர்லாந்து கேப்டன் ஏமாற்ற பேட்டி

“அப்படி உங்களுடைய கேப்டன் இது போன்ற ஆதரவை கொடுப்பது ஒரு வீரருக்கு மிகப்பெரிய விஷயமாகும். இதே போன்ற செயல்களை மற்றொரு கேப்டன் செய்தார். அவர் தான் சௌரவ் கங்குலி. அவர் ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக், ஜாகிர் கான் மற்றும் ஆசிஸ் நெஹ்ரா போன்றவர்களை கண்டறிந்தார். அதே போலவே இந்த வீரர்களுக்கு ஆதரவு கொடுத்து ரோகித் சர்மா கேப்டனாக வெற்றிகளில் சிறப்பான பங்காற்றியுள்ளார்” என்று கூறினார்.

Advertisement