மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா வெளியேறாமல் இருக்க இதை செய்தால் முடியும் – நிர்வாகத்தின் முடிவு என்ன?

Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டன் பதிவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக பாண்டியாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் பங்கேற்று கடைசி இடத்தை பிடித்து வெளியேறியது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அவர் நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

அதோடு பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் தற்போது ஒரு சிக்கலான சூழலில் இருக்கவே அவரை கேப்டன் பதவியில் இருந்து விடுவித்து புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவை நியமிக்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதன் காரணமாக ரோகித் சர்மா அடுத்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறினால் அந்த அணியின் ரசிகர்கள் கூட்டம் பெருமளவு குறையும் என்பதனால் அவரை தக்க வைக்க மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சில நிபுணர்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ரோஹித் சர்மா வெளியேறாமல் இருக்க அவருக்கு மீண்டும் கேப்டன் பதவியை வழங்க வேண்டும் என்று யோசனை தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கேப்டனாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளிலும் அட்டகாசமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது அவர் இருக்கும் சிறப்பான ஃபார்ம் மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய அளவில் உதவும் என்பதனால் அவரை வெளியேற்றாமல் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப அதிரடியாக விளையாட வைத்தால் நிச்சயம் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : ஆஸியின் பவுலிங் அட்டாக் இந்தியாவை வீழ்த்தும்.. அவரை பாக்கெட்டில் போட காத்திருக்கேன்.. ஸ்காட் போலாண்ட்

அண்மையில் டி20 வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் தொடர்ந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட விரும்புகிறார். இருப்பினும் அவருக்கு கேப்டன்சி பதவியை வழங்குவதை மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான அம்பானி குடும்பமே முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement