- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நண்பேன்டா.. இது தெரியாம ரசிகர்கள் அடிச்சுக்குறாங்க.. 2021இல் கோலி செஞ்சதை திரும்பிக் கொடுத்த ரோஹித்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி பல விவாதங்களை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்த அணியில் நடராஜன் போன்ற தமிழ்நாட்டு வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல இளம் வீரர் ரிங்கு சிங் ரிசர்வ் பட்டியலில் மட்டும் சேர்க்கப்பட்டது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இருப்பினும் இந்த அணியில் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலை கொண்ட அவர் கொஞ்சம் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் எடுக்கக் கூடியவர். எனவே அந்த அணுகுமுறை வெஸ்ட் இண்டீஸில் உள்ள ஸ்லோவான பிட்ச்களில் பொருந்தாது என்று கருதும் தேர்வுக்குழு விராட் கோலியை கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளி வந்தன.

- Advertisement -

லெஜெண்ட் நண்பர்கள்:
இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்துள்ள விராட் கோலி 2022 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 82* ரன்கள் அடித்து மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அத்துடன் 2 முறை டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற ஒரே வீரராகவும் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.

எனவே அந்த அனுபவம் மற்றும் தரத்திற்கு மதிப்பளித்து மீண்டும் விராட் கோலி உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலியை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று மும்பையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எதுவுமே சொல்லாத ரோகித் சர்மா வாய் மீது வைத்து சிரித்தார்.

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி போன்ற வீரரின் தரத்தை தெரியாமல் இப்படி கேட்கலாமா? என்ற வகையில் ரோகித் சர்மா சிரிப்பிலேயே பதிலடி கொடுத்தார். முன்னதாக 2021 ஐபிஎல் தொடரில் பெரிய ரன்கள் எடுக்காத ரோஹித் சர்மா சுமாரான ஃபார்மில் இருந்தார். அப்போது துபாயில் நடைபெற்ற 2021 டி20 உலகக் கோப்பையில் சர்மாவை ஏன் தேர்வு செய்தீர்கள்? என்று அப்போதைய கேப்டன் விராட் கோலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இதையும் படிங்க: இந்நேரம் அவர் இடத்துல விராட் கோலி இருந்திருந்தா.. செல்பிஷ்ன்னு சொல்லிருப்பாங்க.. கைஃப் விளாசல்

அதற்கு “ரோஹித் சர்மாவை டிராப் செய்ய சொல்கிறீர்களா” என்று சிரித்துக் கொண்டே விராட் கோலி பதிலளித்தார். அதே போல தற்போது விராட் கோலிக்கு கேப்டனாக ரோகித் சர்மா ஆதரவு கொடுத்துள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் “நண்பேண்டா” என்பதற்கு அடையாளமாக இந்திய அணியில் செயல்பட்டு வருகின்றனர். ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் தான் சமூக வலைதளங்களில் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -