மூழ்கிய இந்தியாவை.. 190 ரன்ஸ் பார்ட்னர்ஷிப் போட்டு தூக்கிய ரிங்கு – ரோஹித் ஜோடி.. 2 உலக சாதனையுடன் வரலாற்று சாதனை

Rohit Rinku
- Advertisement -

ஜனவரி 17ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்தியா இரட்டை சூப்பர் ஓவரில் போராடி வென்றது. மிகவும் பரபரப்பாக நடந்த அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா 129*, ரிங்கு சிங் 69 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்தது.

அதை துரத்திய ஆப்கானிஸ்தானும் ரஹ்மனுல்லா குர்பாஸ் 50, கேப்டன் இப்ராகிம் ஜாட்ரான் 50, குல்பதின் 55* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் 212 ரன்கள் எடுத்தது. அதனால் சமனில் முடிந்த போட்டியின் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. அதற்காக மீண்டும் நடத்தப்பட்ட சூப்பர் ஓவரில் இந்தியா நிர்ணயித்த 12 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் ரவி பிஷ்னோய்க்கு எதிராக 2 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சாதனை ஜோடி:
அதனால் முதலிரண்டு போட்டிகளில் வென்றிருந்த இந்தியா 3 – 0 என்ற கணக்கில் கோப்பையை வென்று 2024 டி20 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகிய முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 22/4 என இந்தியா தடுமாறியது.

அப்போது ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் நிதானமாகவும் நேரம் செல்ல செல்ல ஆப்கானிஸ்தான் பவுலர்களை பந்தாடிய ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கடைசி வரை அவுட்டாகாமல் 5வது விக்கெட்டுக்கு 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றினர். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 5வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற புதிய உலக சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா – ரிங்கு சிங் : 190*, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024
2. மல்லா – ஐரீ : 145, ஹாங்காங்க்கு எதிராக, 2023
3. மார்க் சேப்மேன் – ஜிம்மி நீசம் : 121*, பாகிஸ்தானுக்கு எதிராக, 2023

- Advertisement -

அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர்கள் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா – ரிங்கு சிங் : 190*, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024
2. தீபக் ஹூடா – சஞ்சு சாம்சன் : 176, அயர்லாந்துக்கு எதிராக, 2022

அது மட்டுமல்லாமல் இப்போட்டியில் 20வது ஓவரில் ரோஹித் – ரிங்கு ஆகியோர் சேர்ந்து 36 ரன்கள் அடித்தனர். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 20வது ஓவரில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற உலக சாதனையும் அவர்கள் படைத்துள்ளனர். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா – ரிங்கு சிங் : 36 (கரீம் ஜானத்துக்கு எதிராக), ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024
2. டிம் சைஃபர்ட் – ராஸ் டெய்லர் : 34 (சிவம் துபேவுக்கு எதிராக), 2020

Advertisement