IND vs PAK : இக்கட்டான வேளையில் விராட் கோலி செய்த அந்த விஷயம் சூப்பரா இருந்துச்சு – ரோஹித் சர்மா பாராட்டு

Rohit-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை தொடரின் “சூப்பர் 4” சுற்றில் இரண்டாவது ஆட்டம் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று ஏற்கனவே லீக் சுற்றில் இந்திய அணியிடம் அடைந்து தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த முக்கியமான சூப்பர் 4 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் முதலாவதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக தீர்மானம் செய்தது.

INDvsPAK

- Advertisement -

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து கடைசி பந்திற்கு முன்னதாக த்ரில் வெற்றியை ருசித்தது.

இந்த போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனது 32 வது அரைசதத்தை பதிவு செய்து அசத்தினார். அதோடு கடைசி ஓவரின் போது ஆட்டம் இழந்த அவர் 44 பந்துகளை சந்தித்திருந்த வேளையில் 60 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாகவே இந்திய அணி பெரிய ரன் குவிப்பினை வழங்கியது. இருந்தாலும் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது வருத்தம் தான் இருப்பினும் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விராட் கோலியின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்த தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளார். எங்களது அணியில் ஒரு வீரர் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைத்த வேளையில் அடுத்தடுத்து ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் விராட் கோலி அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க : IND vs PAK : இதெல்லாம் சகஜம், தயவு செய்து திட்டாதீங்க – இளம் வீரருக்கு விராட் கோலி முதல் முன்னாள் வீரர்கள் வரை மெகா ஆதரவு

அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது என பாராட்டுகளை ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாகவே பார்ம் இன்றி தவித்து வரும் விராட் கோலி இந்த ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement