அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பையில் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் முடிந்ததும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கும் இந்திய அணியானது அதன் பின்னர் ஆஸ்திரேலியாலில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த உலகக் கோப்பை அணியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் பந்துவீச்சு துறையில் தான் சற்று பின்னடைவு உள்ளதாக சில கருத்துக்கள் சமூக வலைதளத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
ஏனெனில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய அனுபவ வீரர்கள் மட்டுமே உலகக் கோப்பை அணியில் இருக்கின்றனர் எனவும் அதனை தவிர்த்து ஹர்ஷல் பட்டேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் ஆஸ்திரேலியா மண்ணில் பெரிய அளவு அனுபவம் இல்லாததால் அவர்களுக்கு பதிலாக முகமது ஷமி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று என்றும் சில விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் ஆஸ்திரேலிய மைதானங்களில் அதிக அனுபவம் இல்லை என்றாலும் அர்ஷ்தீப் சிங் அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என ரோகித் சர்மா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில் : அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அழுத்தமான சூழ்நிலைகளில் கூட தனது கவனத்தை இழக்காமல் மிகத் துல்லியமாக அவர் பந்து வீசுகிறார்.
அதோடு எந்தவித அழுத்தமும் இன்றி அவர் தொடர்ச்சியாக அற்புதமாக பந்து வீசி வருகிறார். அவரை அனுபவமற்ற வீரர் என கூற முடியாத அளவிற்கு அற்புதமாகவே செயல்படுகிறார் என்று ரோஹித் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஐபிஎல் போட்டிகளில் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டதால் தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பைக்கான புதிய ஜெர்சியுடன் அசத்தலாக போஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக் – வைரலாகும் புகைப்படம்
இந்திய அணியிலும் தற்போது அர்ஷ்தீப் சிங் அற்புதமாக செயல்பட்டு வருகிறார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலியா மைதானங்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களால் சிறப்பாக செயல்பட முடியும். என்னை பொறுத்தவரை நிச்சயம் அர்ஷ்தீப் சிங் உலகக்கோப்பையில் இந்திய அணியின் கீ பவுலராக திகழ்வார் என ரோகித் கூறியது குறிப்பிடத்தக்கது.



