டி20 உலககோப்பைக்கான புதிய ஜெர்சியுடன் அசத்தலாக போஸ் கொடுத்த தினேஷ் கார்த்திக் – வைரலாகும் புகைப்படம்

Karthik
Advertisement

இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வருகிறார். தோனி இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்ததால் நிரந்தர இடம் இல்லாமல் இருந்து வந்த தினேஷ் கார்த்திக் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எல்லாம் அற்புதமாக செயல்பட்டு இன்றளவும் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

Dinesh Karthik 1

இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 50 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் தற்போது 37 வயதை எட்டியுள்ள போதிலும் தனது அற்புதமான ஃபினிஷிங் திறனை வெளிகாட்டி வருவதால் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

அதோடு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரிலும் தினேஷ் கார்த்திக் விளையாட இருக்கிறார். இந்நிலையில் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்கள் அணிய இருக்கும் புதிய ஜெர்சியை அணிந்தபடி தற்போது தினேஷ் கார்த்திக் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக செப்டம்பர் 20-ஆம் தேதி துவங்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரிலும் இந்த ஜெர்சி பயன்படுத்தப்படும் என்பதினால் நாளைய போட்டியிலேயே இந்த ஜெர்சியுடன் இந்திய வீரர்களை நாம் பார்க்க முடியும்.

வெளிர் நீல நிறத்தில் இருக்கும் இந்த ஜெர்சியானது பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது. தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு தற்போது இணையத்தில் ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement