சுப்மன் கில் தலைமையிலான இந்திய இளம் அணியானது தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு பின்னர் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்தனர்.
இதன் காரணமாக தற்போது சுப்மன் கில் தலமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணியே ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் முடிவடைந்த வேலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளனர்.
இதனால் எஞ்சியுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்த டி20 தொடரை கைப்பற்றப்போவது எந்த அணி? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடரானது எதிர்வரும் ஜூலை 14-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இவ்வேளையில் அடுத்ததாக இந்திய அணி இம்மாத இறுதியில் இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடும் அவர்களுக்கு சற்று தற்காலிக ஓய்வை வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதையும் படிங்க : இதெல்லாம் கண் துடைப்பு தான்.. சஞ்சு சாம்சனின் கரியரில் விளையாடும் பி.சி.சி.ஐ – விவரம் இதோ
அதன் காரணமாக எதிர்வரும் இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹார்டிக் பாண்டியா அல்லது கே.எல் ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதோடு அந்த சுற்றுப்பயணத்தின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் தனது பணியை தொடங்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.