அதை பத்தி யோசிக்க நாங்க ஆள் கிடையாது. பி.சி.சி.ஐ சொல்றத தான் நாங்க கேட்போம் – ரோஹித் பளீச்

Rohith
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவங்கிய டி20 உலகக் கோப்பை தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை பெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டியானது நாளை அக்டோபர் 23-ஆம் மெல்போர்ன் மைதானத்தில் துவங்கயிருக்கிறது. இந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி உலக ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

INDvsPAK

இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி குறித்து பேட்டி அளித்திருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து பேசுகையில் கூறியதாவது : ஒவ்வொரு ஆட்டத்திலும் தேவைப்பட்டால் வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய தயாராக இருக்கிறோம். ஒன்று அல்லது இரண்டு மாற்றங்களை தேர்வு செய்ய நாங்கள் தயங்கவில்லை.

ஏனெனில் இந்த தொடரில் தற்போதைய செயல்திறன் மற்றும் செயல்படும் தன்மையை குறித்து அணி தேர்வு அமையும். ஐசிசி போட்டிகளில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே இமமுறை நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியமானது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக வெற்றி பெறுவோம். இந்த போட்டி எங்களுக்கு முக்கியமானது. ஒன்பது ஆண்டுகளாக ஐசிசி தொடரில் நாங்கள் வெற்றி பெறவில்லை இது இந்திய அணிக்கு ஒரு பெரிய ஏமாற்றம்தான் என்று ரோகித் சர்மா தெரிவித்தார்.

மேலும் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் அங்கு பயணித்து விளையாடுவது குறித்து பிசிசிஐ தான் முடிவினை மேற்கொள்ள வேண்டும். பாகிஸ்தான் செல்வது குறித்து எந்த ஒரு முடிவையும் என்னால் எடுக்க முடியாது. அந்த முடிவு பிசிசிஐ-யால் மட்டுமே எடுக்கப்பட முடியும். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. பிசிசிஐ என்ன சொல்கிறதோ அதை மட்டுமே தான் நாங்கள் கேட்க முடியும்.

எங்களுடைய அனைத்து நடவடிக்கையும் அவர்களே மேற்கொள்வார்கள் அவர்களின் தலைமையின் கீழே நாங்கள் இந்திய அணிக்காக விளையாட காத்திருக்கிறோம் என பிசிசிஐ-யின் மீது நம்பிக்கை வைத்து ரோகித் சர்மா பதிலை அளித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இப்போதைக்கு இந்த டி20 உலக கோப்பையில் நாங்கள் விளையாடப் போட்டிகளை மட்டுமே யோசித்து வருகிறோம்.

இதையும் படிங்க : விராட் கோலி, பாபர் அசாம் சாதனைகளை உடைத்த நியூசிலாந்து வீரர் – சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

அதைத் தாண்டி எதைப்பற்றி யோசிப்பதாக இருந்தாலும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் அனுமதியின்றி எதையும் நாங்கள் யோசிக்க மாட்டோம் என ரோகித் சர்மா தெளிவாக பளீச் என்று தனது பதிலை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement