இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது இன்று டிசம்பர் 14-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
ரோஹித் சர்மா எடுத்த தைரியமான முடிவு :
இவ்வேளையில் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் 13.2 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. பின்னர் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மழை காரணமாக பலமணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போதும் மழையின் பாதிப்பு இருக்கக்கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தைரியமாக முதலில் பந்து வீசுவதாக அதிரடியான முடிவை எடுத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்திய பட வைத்துள்ளது. ஏனெனில் கடந்த 39 ஆண்டுகளாகவே பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் டாசில் வெற்றி பெற்ற கேப்டன்கள் முதலில் பேட்டிங் செய்வதாக தான் அறிவித்துள்ளார்கள்.
ஆனால் ரோகித் சர்மா மட்டும்தான் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் 39 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மைதானத்தில் டாசில் வெற்றி பெற்ற பிறகு பந்துவீச்சை தேர்வு செய்த இரண்டாவது கேப்டனாக ரோகித் சர்மா அந்த முடிவை எடுத்துள்ளார். பொதுவாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்வது சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் போட்டியில் நான்காம் நாள் மற்றும் ஐந்தாம் நாளின் போது சேசிங் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். எனவே எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பேட்டிங்கைதான் தேர்வு செய்வார்கள். ஆனால் இந்த மைதானத்தின் புள்ளி விவரங்களை அறிந்துள்ள ரோஹித் சர்மா கடைசியாக நடைபெற்ற ஐந்து போட்டி டெஸ்ட் போட்டிகளில் முதலில் பவுலிங் செய்த அணியை வெற்றி பெற்றுள்ளதால் அந்த முடிவை தைரியமாக கையில் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க : 28/2 டூ 210/3.. இளம் வீரருக்கு நேர்ந்த பரிதாபம்.. ஹென்றிக்ஸ் அபார சாதனை.. பாகிஸ்தானின் 200 சாதனையை உடைத்த தெ.ஆ
மேலும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை ரோஹித் சர்மா செய்துள்ளார். அந்த வகையில் ஹர்ஷித் ராணா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை நீக்கிவிட்டு அவர்களுக்கு ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை அணிக்குள் கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.