சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறப்போவது எப்போது? – சிறுவயது பயிற்சியாளர் கருத்து

Rohit
- Advertisement -

அண்மையில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. அந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்ற கையோடு டி200 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிவித்திருந்தனர்.

ரோஹித் சர்மாவின் ஓய்வு எப்போது? :

அதனை தொடர்ந்து தற்போது ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக தோனிக்கு பிறகு ஐசிசி கோப்பையை பெற்று தந்த ரோகித் இன்னும் சில கோப்பைகளை பெற்று தர வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நோக்கி தற்போது இந்திய அணியை அவர் தயார் செய்து வருகிறார். இந்நிலையில் 37 வயதாகும் அவர் எப்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்? என்பது குறித்து ரோகித் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளரான தினேஷ் லாட் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்று முடிந்தவுடன் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் தற்போது அவருக்கு வயது அதிகரித்துக் கொண்டே போகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து நிச்சயமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஓய்வுபெற அதிக வாய்ப்புள்ளது. ஆனாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தொடர்ந்து விளையாடுவார். 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலககோப்பையில் விளையாடிவிட்டு இந்திய அணிக்காக அந்த கோப்பையை கைப்பற்றி கொடுத்த பிறகு அவர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வை அறிவிப்பார்.

இதையும் படிங்க : இதெல்லாம் அங்கேயே பாத்துட்டோம்.. 155கி.மீ மயங் யாதவ் பாத்து கவலையில்ல.. வங்கதேச கேப்டன் சான்டோ பேட்டி

ஆனால் தற்சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியின் முடிவோடு அவர் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவார் என்று தான் நினைப்பதாக தினேஷ் லாட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement