இதெல்லாம் அங்கேயே பாத்துட்டோம்.. 155கி.மீ மயங் யாதவ் பாத்து கவலையில்ல.. வங்கதேச கேப்டன் சான்டோ பேட்டி

- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அக்டோபர் 9ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அந்த போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்ற இந்திய அணி தயாராகி வருகிறது. முன்னதாக முதல் போட்டியில் இந்தியாவுக்காக வேகப்பந்து வீச்சாளர் மயங் யாதவ் அறிமுகமாகி அசத்தினார்.

கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமாகி 155கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசிய அவர் முதலிரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று சாதனை படைத்தார். அதன் பின் காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர் தற்போது இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். அந்த வாய்ப்பில் காயத்திலிருந்து குணமடைந்து வந்த காரணத்தால் அவரால் ரசிகர்கள் எதிர்பார்த்த வேகத்தில் வீச முடியவில்லை.

- Advertisement -

மயங் யாதவ் கவலையில்ல:

இருப்பினும் முதல் ஓவரிலேயே ஒரு ரன் கூட கொடுக்காத மயங் யாதவ் மெய்டனாக பந்து வீசி வங்கதேசத்துக்கு சவாலை கொடுத்தார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் அவர் வேகத்தை அதிகரித்து வங்கதேச பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார் என்று நம்பலாம். இந்நிலையில் மயங் யாதவ் போன்ற பவுலர்கள் தங்கள் அணியிலும் இருப்பதாக வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ தெரிவித்துள்ளார்.

அவர்களை வலைப்பயிற்சியில் போதுமான அளவுக்கு எதிர்கொண்டுள்ளதாகவும் சான்டோ கூறியுள்ளார். அதனால் மயங் யாதவ் பந்துகளை பார்த்து தங்களுடைய பேட்ஸ்மேன்கள் கவலைப்படப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரைப் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களிடம் வலைப்பயிற்சியில் உள்ளார்கள்”

- Advertisement -

உண்மை என்ன:

“எனவே மயங் யாதவ் பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்படுவோம் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் அவர் நல்ல பவுலர் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார். உண்மையில் வங்கதேச டி20 அணியில் தொடர்ச்சியாக 150கி.மீ வேகத்தில் வீசும் பவுலர்கள் யாருமே இல்லை. அதிகபட்சமாக டஸ்கின் அகமது 140 – 145கி.மீ சராசரி வேகத்தில் வீசி வருகிறார்.

இதையும் படிங்க: ஓப்பனிங்கில் இப்படி வலிக்காம ஆடுனா.. அவரே உங்க கேரியரை முடிச்சுருவாரு.. சாம்சனை எச்சரித்த ஆகாஷ் சோப்ரா

அதே சமயம் டெஸ்ட் அணியில் நஹிட் ராணா 150கி.மீ வேகத்தில் வீசினார். ஆனால் அவரும் மயங் யாதவ் வேகத்திற்கு வீசியதில்லை என்றே சொல்லலாம். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து தோல்விகளை கொடுத்த இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடிக்க வங்கதேசம் தயாராகி வருகிறது. அப்போட்டி டெல்லியில் நாளை இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement