IND vs ENG : 2வது போட்டியிலும் மிரட்டிய இந்தியா, மீண்டும் அபார உலகசாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா

Rohith
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 9-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பர்மிங்காம் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மாவுடன் ரிஷப் பண்ட் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கினார். முதல் விக்கெட்டுக்கு அதிரடியான பவுண்டரிகளை பறக்கவிட்டு 49 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் ரோகித் சர்மா 31 (20) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

IND vs ENG Jos Buttler

- Advertisement -

அந்த நிலைமையில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 26 (15) ரன்கள் பறக்கவிட்ட ரிஷப் பண்ட்டும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்ததால் 61/3 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 15 (11) ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 12 (17) ரன்களிலும் 10-வது ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தனர். அதனால் 89/5 என திணறிய இந்தியாவை காப்பாற்ற மெதுவாக விளையாடிய தினேஷ் கார்த்திக்கும் முக்கிய நேரத்தில் 12 (17) ரன்களில் ரன் அவுட்டானார்.

அசத்திய இந்தியா:
அதன் காரணமாக 150 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு மறுபுறம் அதிரடி காட்டிக்கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரியுடன் கடைசி வரை அவுட்டாகாமல் 46* (29) ரன்களும் ஹர்ஷல் படேல் முக்கியமான 13 (6) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினர். அதனால் 20 ஓவர்களில் இந்தியா 170/8 ரன்கள் எடுக்க இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

Ravindra Jadeja IND vs ENg

அதை தொடர்ந்து 171 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஜேசன் ராயை கோல்டன் டக் அவுட் செய்த புவனேஸ்வர் குமார் 3-வது ஓவரில் கேப்டன் பட்லரை 4 (5) ரன்களில் அவுட்டாக்கி மிரட்டினார். அந்த நிலைமையில் அதிரடி காட்ட முயன்ற லியம் லிவிங்ஸ்டன் 15 (9) ரன்களிலும் ஹரி ப்ரோக் 8 (9) ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அந்த சமயத்தில் காப்பாற்றுவார்கள் என கருதப்பட்ட டேவிட் மாலன் 15 (9) சாம் கரண் 2 (4) என முக்கிய வீரர்களும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் நடையை கட்டியாதால் 60/6 என தடுமாறிய இங்கிலாந்தை காப்பாற்ற போராடிய மொயீன் அலியும் 35 (21) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா பதிலடி:
இறுதியில் டேவிட் வில்லி அதிரடியாக 33* (22) ரன்களை எடுத்த போதிலும் எஞ்சிய பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 17 ஓவர்களில் 121 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சஹால் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா ரோகித் சர்மா கேப்டனாக திரும்பியதுமே 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி சமீபத்திய டெஸ்ட் தொடரில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு தக்க பதிலடி கொடுத்து பழிக்கு பழி தீர்த்துள்ளது.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

ரோஹித் உலகசாதனை:
முன்னதாக இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றியை பதிவு செய்த கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 13 வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்த முதல் கேப்டன் என்ற உலக சாதனை படைத்திருந்தார். அந்த நிலைமையில் இப்போட்டியிலும் இந்தியாவை வெற்றிகரமாக வழிநடத்திய அவர் ஆடவர் மற்றும் மகளிர் என ஒட்டுமொத்த சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட்டர் என்ற புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே ஆடவர் கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற உலகசாதனை படைத்துள்ள நிலையில் தற்போது உலகிலேயே அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட்டர்களாக சாதனை படைத்துள்ள ஆஸ்திரேலிய வீராங்கனை எலிஸ் பெரி மற்றும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் ஆகியோரை முந்தி இந்த புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. ரோஹித் சர்மா : 127* போட்டிகள்
2. எலிஸ் பெரி : 126 போட்டிகள்
3. சுசி பேட்ஸ் : 126 போட்டிகள்
4. சோயப் மாலிக் : 124 போட்டிகள்
5. டீன்ட்ரா டோட்டின் : 124 போட்டிகள்
6. ஹர்மன்ப்ரீத்தி கௌர் : 124 போட்டிகள்
7. டேனியல் வைட் : 124 போட்டிகள்

Rohith

அதேபோல் இப்போட்டியில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 31 (20) ரன்களை அதிரடியாக எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையும் உலக அளவில் 2-வது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெற்றார். சொல்லப்போனால் இப்போட்டிக்கு முன்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே தலா 298 பவுண்டரிகளுடன் சமமாக இருந்தனர்.

ஆனால் இப்போட்டியில் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் 3 பவுண்டரி பறக்கவிட்ட ரோகித் சர்மா இந்த சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. பால் ஸ்டிர்லிங் : 325
2. ரோஹித் சர்மா : 301*
3. விராட் கோலி : 298
4. மார்ட்டின் கப்டில் : 287

Advertisement