அந்த 2 பேரும் உச்சத்தை தாண்டி விட்டதால்.. ஆஸியில் இந்தியா ஜெய்ப்பது கஷ்டம் தான்.. சஞ்சய் மஞ்ரேக்கர்

Sanjay Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை 1992க்குப்பின் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட தொடரை வென்று இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

மறுபுறம் கடந்த 2 தொடர்களில் சந்தித்த தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த 2 தொடர்களில் இந்தியா வெற்றி பெறுவதற்கு புஜாரா மற்றும் ரகானே ஆகியோர் முக்கிய பங்காற்றினர். ஆனால் இம்முறை சுமாரான ஃபார்ம் காரணமாக அவர்கள் கழற்றி விடப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

உச்சத்தை கடந்துட்டாங்க:

எனவே இம்முறை இந்தியா வெற்றி பெறுவதற்கு பேட்டிங்கில் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது. இந்நிலையில் 36 வயதை தாண்டியுள்ள ரோஹித், விராட் கோலி ஆகியோர் தங்களுடைய கேரியரின் உச்சத்தை கடந்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவில் மீண்டும் இந்தியா பார்டர் – கவாஸ்கர் கோப்பையை தக்க வைப்பது கடினம் என்று அவர் கூறியுள்ளார்.

அதே போல சமீப காலங்களில் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் போராடி வெல்லும் சாம்பியன் குணம் ஆஸ்திரேலிய அணியில் குறைந்துள்ளதாகவும் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “கோப்பையை தக்க வைப்பது கடினமாக இருக்கலாம்”

- Advertisement -

சாம்பியன்களின் குணம்:

“ஏனெனில் விராட், ரோஹித் ஆகியோர் தங்களுடைய உச்சத்தில் இல்லை. நியாயமாக சொல்ல வேண்டுமெனில் அவர்கள் தங்களுடைய பவரின் உச்சத்தில் இல்லை. சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஆகியோர் உயர்ந்து நிற்கக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளனர். ரிஷப் பண்ட் மட்டுமே தற்போதைய இந்திய அணியில் தன்னுடைய உச்சத்தில் இருப்பதாக கருதுகிறேன். அவர் இந்திய அணியின் முக்கியமான வீரரும் கூட”

இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவுடன் சேர்த்து அவரையும் விளையாட வச்சது இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் – ஆகாஷ் சோப்ரா

“இந்தியாவின் பந்து வீச்சில் உள்ள குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த காலங்களில் தாங்கள் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் சாம்பியன்களைப் போல விளையாடி வென்ற திறனும் ஒளியும் தற்போது ஆஸ்திரேலியர்களிடம் இல்லை” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் 22 ஆம் தேதி பெர்த் நகரில் துவங்க உள்ளது.

Advertisement