படு காஸ்ட்லீயான லம்போர்கினியில் தனது மனைவியுடன் வந்த ரோஹித் சர்மா – கார் நம்பர் பிளேட் தான் ஹைலைட்டே

Rohit-and-Ritika
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அதனைதொடந்து அடுத்ததாக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் இந்த இரண்டு தொடர்வகளோடு நாடு திரும்ப இருந்த ரோகித் சர்மா அங்கிருந்து அமெரிக்கா சென்று தனது கிரிக்கெட் அகாடமியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

- Advertisement -

அதன்பிறகு டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் ஆசியகோப்பை தொடருக்காக தயாராக இருக்கிறார். இந்நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ள ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகாவுடன் மும்பை வீதிகளில் தனது லம்போர்கினி காரில் வளம் வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி அவர் வைத்திருக்கும் அந்த லம்போர்கினி காரின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் நான்கு கோடியே 20 லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு அந்த வண்டியின் நம்பர் பிளேட் தான் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தைக் ஈர்த்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : ஸ்ரேயாஸ், ராகுல் இருக்கட்டும், ஒரே கல்லில் 2 மாங்கா அடிக்க நாம ஏன் அவர ட்ரை பண்ணக்கூடாது – இளம் வீரருக்கு பிரக்யான் ஓஜா ஆதரவு

ஏனெனில் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்த அதிகபட்ச ரன்களான 264 ரன்கள் என்கிற அந்த எண்ணை வைத்து (0264) அந்த காரின் பதிவு எண்ணானது இருப்பதால் அவரது கார் நம்பர் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement