இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளுமே முனைப்பு காட்டும் என்பதனால் இந்த போட்டியின் மீது நான் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த மூன்றாவது போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் இணைந்து ஒரு மாபெரும் சாதனையை நிகழ்த்த காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இணைந்து இன்னும் இரண்டு ரன்கள் அடித்தால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை குவித்த ஜோடி என்ற பெருமையை பெறுவார்கள்.

இதுவரை 85 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடியுள்ள அவர்கள் இருவரும் 4998 ரன்களை 62.47 சராசரியுடன் விளாசியுள்ளார்கள். இவர்கள் இருவருமே இணைந்து 18 முறை 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள்.
இவர்களுக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த கிரினிட்ஜ் மற்றும் ஹெய்ன்ஸ் ஆகியோர் 97 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடி 5000 ரன்களை குவித்தனர் அவர்களது அந்த சாதனையை தகர்க்கும் வகையில் தற்போது 11 இன்னிங்ஸ்களுக்கு முன்னதாகவே இந்த ஜோடியை அந்த சாதனையை முறியடிக்க காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : IND vs AUS : 3 ஆவது போட்டிக்கு முன்பாக ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கிய – எம்.எஸ்.தோனி
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரது ஜோடி இணைந்து இந்த மூன்றாவது போட்டியில் வெற்றியை பெற்று தரவேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் 176 இன்னிங்ஸ்களில் ஒன்றாக விளையாடி 8227 ரன்கள் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



